உள்ளடக்கத்துக்குச் செல்

தண்டனை

விக்கிமேற்கோள் இலிருந்து
ஒரு நபர் தீமை செய்கிறார், எனவே இந்த தீமையை எதிர்த்துப் போராடுவதற்காக, மற்றொரு நபர் அல்லது ஒரு குழுவினர், மற்றொரு தீமையை உருவாக்குவதை விட வேறு எதையும் யோசிக்க முடியாது, அதை அவர்கள் தண்டனை என்று அழைக்கிறார்கள். ~ லியோ டால்ஸ்டாய்

தண்டனை என்பது ஒரு குழு அல்லது தனிநபர் மீது அவர்கள் விரும்பாத அல்லது அவர்களுக்கு சிரம்மான செயலை செய்யச்சொல்லி கட்டாயப்படுத்துவதோ அல்லது அவர்களை உடல்ரீதியாக அல்லது மனரீதியாக துன்புறுத்துதல் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

 • நாம் பாவமும் செய்யவில்லை. புண்ணியமும் செய்ய வேண்டுவதில்லையென்று சிலர் சொல்லுவார்கள். அது கூடாது. அதேனென்றால், அரசனுக்குட்பட்ட குடிகள் அரசன் கட்டளைப்படி, செய்யும்படி சொன்னதையும் செய்ய வேண்டும். செய்யாதே என்றதையும் செய்யக் கூடாது. அந்த கட்டளைப்படி நடவாதவர்களைத் தண்டிப்பான். இந்த அசுத்த வஸ்துக்களைப் புசிக்காதே என்றபடி புசிக்கக்கூடாது. இந்தக் கிரகத்தை (வீட்டை) வெள்ளையடித்துச் சுத்தம் செய் என்றபடி சுத்தஞ் செய்ய வேண்டும். முன்னால் சொன்னதும் இவர்கள். நன்மைக்குத்தான். பின்னல் சொன்னதும் இவர்கள் நன்மைக்குத்தான். இரண்டில் ஒன்று தவறினலும் அரசன் தண்டிப்பான்.
  • சோ. வீரப்ப செட்டியார் (1902-ல்) (நாகை வெளிப்பாளையம் சைவ சித்தாந்த சபையில்)[1]
 • ஒரு நபரை சீர்திருத்துவதற்கும் மேலான தண்டனை என்பது அவர் செய்த, குற்றத்தை, குற்றவுணர்வு ஏற்படுத்தும் வலியை உணரச் செய்வதாகும். குற்றம் செய்தவரை அடித்துக் கொள்வதோ, வேறுவிதமான உடல் வதைகளுக்கு உள்ளாக்குதோ தண்டனையாகாது. தாங்கள் செய்த குற்றத்தின் வீரியத்தை உணர்வதும், அந்த உணர்வோடு வாழ்வதும்தான் அவர்களுக்கான தண்டனையாக இருக்க முடியும்.
  • ராகமாலிகா கார்த்திகேயன், பத்திரிக்கையாளர்.[2]
 • தீமை செய்பவர்களுக்கு தீமையே செய்யுங்கள், அதனால், மக்களை தீமை புரியாதவாறு நாம் தடுத்து விடுகிறோம் என்று பொருள்! -கான்பூசியசு[3]
 • தீயவன் ஒருவன் தண்டிக்கப்பெறுவது நோயாளிக்கு மருந்து கொடுப்பது போலாகும். எல்லா வகைத் தண்டனையும் ஒரு வகை மருந்துதான். பிளேட்டோ[4]
 • குற்றத்திற்குத் தண்டனை அளித்தால் குற்றவாளிக்கு மட்டும் கேவலம் அளிக்காவிட்டால் சமூகம் முழுவதற்கும் கேவலம். -ஸி. ஸிம்மன்ஸ்[4]
 • தண்டனை பெறுவோனை விட, தண்டிப்பதில் பொது மக்களுக்கே அதிக அக்கறையுண்டு. - கேட்டோ[4]
 • நாம் தூக்கில் போடும் மனிதனைத் திருத்துவது நோக்கமன்று அவன் மூலம் மற்றவர்களையே திருத்தி எச்சரிக்கை செய்கிறோம். - மாண்டெயின்[4]
 • சிறைகள் பள்ளிக்கூடங்களுடன் சேர்ந்தவை; பள்ளிக்கூடங்கள் குறைந்தால், சிறைகளை அதிகமாக்கவேண்டியிருக்கும். -ஹொரேஸ்மான்[4]

சான்றுகள்[தொகு]

 1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 91-100. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
 2. இந்து தமிழ் இதழ், 2019, திசம்பர் 5. பக்கம் 6
 3. என். வி. கலைமணி (2000). கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள். நூல் 7-25. சாந்தி நிலையம். Retrieved on 7 ஏப்ரல் 2020.
 4. 4.0 4.1 4.2 4.3 4.4 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 203-204. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=தண்டனை&oldid=21651" இலிருந்து மீள்விக்கப்பட்டது