லியோ டால்ஸ்டாய்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
1908ல் லியோ டால்ஸ்டாயின் வண்ண ஓவியம்

லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) என அழைக்கப்படும் லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாய் (Lev Nikolayevich Tolstoy, செப்டம்பர் 9 [யூ.நா. ஆகஸ்ட் 28] 1828 – நவம்பர் 20 [யூ.நா. நவம்பர் 7] 1910) (ரஷ்ய மொழி: Лев Никола́евич Толсто́й, உச்சரிப்பு: லியேவ் நிக்கலாயெவிச் தல்ஸ்தோய்), ஒரு ரஷ்ய எழுத்தாளர் ஆவார். இவர் புதின எழுத்தாளர்களுள் மிகச் சிறந்தவர்களுள் ஒருவராக மதிக்கப்படுகின்றார். இவரது மிகச் சிறந்த ஆக்கங்களான போரும் அமைதியும், அன்னா கரேனினா ஆகியவை, 19 ஆம் நூற்றாண்டு ரஷ்ய வாழ்க்கையை விபரிப்பதில் உண்மைவாதப் புனைகதைகளின் உயர்நிலையைக் காட்டுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  • சந்தோஷமான தருணங்களை பிடித்து கொள், காதலி,காதலிக்கபடு! அது ஒன்றே உண்மை,மற்றவை எல்லாம் மாயை.நாம் ஆர்வம்கொள்ளும் ஒரே விஷயம் இது தான்.
  • காத்திருக்க தெரிந்தவனுக்கே அனைத்தும் கிட்டும்.
  • நேர்மையாய் வாழவேண்டுமாயின் வதைபடுதலும் தேம்பிக்கலங்குதலும், முட்டி மோதிக்கொள்ளுதலும், இழப்புக்குள்ளாதலும், தொடங்குதலும் தூக்கியெறிதலும், மீண்டும் தொடங்குதலும் மீண்டும் தூக்கியெறிதலும் தவிர்க்க இயலாதவை. நிம்மதி ஆன்மாவின் இழிநிலை.
  • எல்லோரும் உலகத்தை எப்படி மாற்ற வேண்டும் என்று எண்ணுகிறார்களே தவிர, ஒருவரும் தன்னைப் எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என எண்ணுவதில்லை.
  • ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

வெளி இணைப்புக்கள்[தொகு]

Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


"https://ta.wikiquote.org/w/index.php?title=லியோ_டால்ஸ்டாய்&oldid=13825" இருந்து மீள்விக்கப்பட்டது