உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் மொழியின் சிறப்பு

விக்கிமேற்கோள் இலிருந்து

தமிழ் மொழியின் சிறப்பு பற்றி பலரும் பல கருத்துக்களை கூறியுள்ளனர். அவற்றில் சில.

மேற்கோள்கள்[தொகு]

 • தமிழ்மொழி இலக்கியத்தின் நிலைக்களன்; இசையில் இனிய ஊற்று; நாடகத்தின் நலங்கொழிக்கும் நன்மொழி! - பேராசிரியர் க. அன்பழகன்
 • தமிழன் என்றொரு இனம் உண்டு! தனியே அவர்க்கொரு குணம் உண்டு! - நாமக்கல் கவிஞர்
 • எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெருந் தமிழ் அணங்கே! உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துவோம். - பேராசிரியர் சுந்தரம்பிள்ளை
 • இருப்பாய் தமிழா நெருப்பாய்! இதுவரை இருந்தது போதும் செருப்பாய்! - கவிஞர் காசி ஆனந்தன்
 • பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடைய மொழி உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்தது தனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம். - பரிதிமாற் கலைஞர்

பாவேந்தர் பாரதிதாசன்[தொகு]

 • தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத் தமிழ் எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேன்!
 • தீங்கு நேர்ந்திடில் தமிழர்க்கே - இந்தத் தேகம் இருந்தொரு லாபமுண்டோ?
 • தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்
 • தமிழ் என்று தோள் தட்டி ஆடு - நல்ல தமிழ் வெல்க வெல்கவென்றே தினம் பாடு
 • இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கு இன்பந்தரும்படி வாய்த்த நல் அமுது!
 • கெடுதல் எங்கே தமிழின் நலம் - அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க!
 • தனிமைச் சுவையுடைய சொல்லை - எங்கள் தமிழினும் வேறெங்கும் யாம் கண்டதில்லை!
 • தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத் தமிழ் நல்ல புலவர்க்கு வேல்
 • தமிழ் எங்கள் உயிர் என்பதாலே - வெல்லுந் தரமுண்டு தமிழர்க்கு இப்புவி மேலே!
 • தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
 • எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லையயன்றால் இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்!
 • வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம்
 • இன்பத்தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர் என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால் துன்பங்கள் நீங்கும், சுகம் வரும் நெஞ்சினில் தூய்மையுண்டாகிடும், வீரம் வரும்!
 • எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
 • தொண்டு செய்வாய் தமிழுக்கு துறை தோறும், துறை தோறும் துடித்தெழுந்தே!
 • எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித் தலைமுறைகள் பல கழித்தோம்; குறை களைந்தோமில்லை தகத் தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்!
 • என்றும் தமிழ் வளர்க - கலை
யாவும் தமிழ் மொழியால் விளைந்தோங்குக!
இன்பம் எனப்படுதல் - தமிழ்
இன்பம் எனத் தமிழ் நாட்டினர் எண்ணுக!

வெளியிணைப்புக்கள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=தமிழ்_மொழியின்_சிறப்பு&oldid=36836" இலிருந்து மீள்விக்கப்பட்டது