தவறுகள்

விக்கிமேற்கோள் இலிருந்து

தவறுகள் தவிர்க்க முடியாத நிகழ்வுகள், ஒரு மனிதர் தற்செயலாக தீவாய்ப்பு ஏற்படக்ககூடிய ஒன்றைச் செய்துவிடுகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  • எந்த மனிதனும் தவறு செய்யக்கூடும்; ஆனால், முட்டாளை, தவிர வேறு எவனும் அதைத் தொடர்ந்து செய்ய மாட்டான். -ஸிஸரோ[1]
  • எந்த மனிதனும் பல தவறுகளையும். பெரிய தவறுகளையும் செய்யாமல் பெருமையுடையவனாகவோ, நல்லவனாகவே ஆனதில்லை. - கிளாட்ஸ்டன்[1]
  • குற்றமே செய்யாமல் இருப்பவர்கள் இறந்து போனவர்களே. - லேலண்ட்[1]
  • விஞ்ஞானம் முழுவதிலும் தவறுதான் உண்மைக்கு முன்னால் செல்லும். உண்மைக்குப் பின்னால் கடைசியாக நிற்காமல், அது முன்னால் போவதே நலம். - வால்போஸ்[1]
  • கீழே விழாமல் இருத்தல் நமக்குப் பெரிய பெருமையன்று ஆனால், விழுந்த பொழுதெல்லாம் எழுந்திருத்தலே பெருமை. - கன்ஃபூஸியஸ்[1]
  • தெரியாமல் செய்த பிழைக்கு நாம் அனுதாபம் காட்ட வேண்டும். ஏளனம் செய்யக்கூடாது. செஸ்டர்ஃபீல்ட்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 206. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=தவறுகள்&oldid=21703" இலிருந்து மீள்விக்கப்பட்டது