உள்ளடக்கத்துக்குச் செல்

செஸ்டர்பீல்டு

விக்கிமேற்கோள் இலிருந்து
(செஸ்டர்ஃபீல்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

செஸ்டர்பீல்டு (Philip Stanhope, 4th Earl of Chesterfield, 22 செப்டம்பர் 1694 - 24 மார்ச் 1773) ஒரு பிரித்தானிய அரசியல்வாதி, கடித எழுத்தாளர் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • எவன் அவசரப்பட்டாலும், அது அவன் மேற்கொண்டுள்ள காரியம் அவன் சக்திக்கு மிகவும் மேற்பட்டது என்பதைக் காட்டுகின்றது. அவசரம் வேறு, பரபரப்பு வேறு. [2]
  • பயத்தை வெளிக்காட்டினால் அபாயத்தை எதிர்கொண்டு அழைப்பதாகும்.[3]
  • திருட்டுச்சொத்தை வாங்குதல் தானே திருடியது போன்ற குற்றமாவது போல, அவதூறைக் கேட்டுக்கொண்டிருப்பதும் குற்றமாகும்.[4]
  • நமது முதுமையில் நாம் ஒதுங்கியிருந்து இதமடைய இன்றியமையாத பாதுகாப்பு அறிவுடைமையே இளமையிலேயே நாம் அதை நட்டு வைக்காவிட்டால், நாம் முதுமையடையும் பொழுது. அதனால் நிழல் எதுவும் தர முடியாது.[5]
  • பெரும் தகுதியால் உன்னைப் பிறர் மதிப்பார்கள். பெரும் குறைபாடுகளால் உன்னை வெறுப்பார்கள். ஆனால், அற்ப விஷயங்கள். சொற்ப உபகாரங்கள். ஒன்றுமில்லை என்று சொல்லத்தக்க சாதாரண விஷயங்களைக்கொண்டே உலக வாழ்க்கையில் மக்கள் உன்னை விரும்புகிறார்கள். அல்லது வெறுக்கிறார்கள்.[6]
  • உங்களிடம் ஆலோசனை கேட்கவருபவன் நீங்கள் அவனைப் புகழ்ந்து பேசவே விரும்புகிறான்.[7]
  • ஆண்களும் பெண்களும் அறிவைக்காட்டிலும் இதயங்களாலேயே இழுத்துச் செல்லப்பெறுகின்றனர். இதயத்திற்கு வழி, புலன்கள் கண்களையும் காதுகளையும் திருப்தி செய்தாலும் காரியம் பாதி கைகூடிவிடும்.[8]
  • உலகம் என்ற நாட்டைப்பற்றி விளக்கத்தைக்கொண்டு தெரிந்துகொள்ள முடியாது: ஒருவர் தாம் அதில் யாத்திரை செய்து பழகியே தெரிந்துகொள்ளல் வேண்டும்.[9]
  • நீ எவ்வளவு அழகிய உடலைப் பெற்றிருந்தாலும், அழுக்கான, கிழிந்த கந்தல்களை நீ அணிந்திருந்தால், உனக்குச் சரியான வரவேற்பு இராது. அதுபோலவே, உன் கருத்துகள் எவ்வளவு நீதியானவைகளாயிருந்தபோதிலும், உன் எழுத்து நடை கரடு முருடாயும். நாகரிகமின்றியும். பாமர முறையிலும் இருந்தால், உன் எழுத்துக்குச் சரியான வரவேற்பு இராது நடைதான் கருத்துகளின் உடை.[10]
  • சொற்பக் கடனுள்ளவன் சொற்பக் காலத்தில் அதை அடைத்து விடலாம். அவன் கவனமாயிருந்தால், அடைத்துவிடுவான் அவன் அசட்டையாயிருந்துவிட்டால் கடன் பெருகிவிடும் அவன் ஒருகாலும் அடைக்க முடியாது என்று மனம் தளர்ந்து போவான். அதனால் தன் கணக்குகளை ஒரு போதும் திருப்பிப் பார்க்கமாட்டான்.[11]
  • கடிதம் யாருக்கு எழுதப்பெறுகின்றதோ அவனையும், எழுதுவோனையும் இருவரையும் எடுத்துக் காட்டுகின்றது [12]
  • ஒரே விஷயத்தில் கவனத்தைச் செலுத்தி அதில் தளர்ச்சியில்லாமல் உறுதியாக நிற்கும் ஆற்றல். அபார அறிவுக்கு அடையாளம்.[13]
  • நேரத்தின் உண்மையான மதிப்பை அறிந்து ஒவ்வொரு நிமிடத்தையும் நன்றாக அனுபவிக்கவும். சோம்பல் வேண்டாம்: தாமதம் வேண்டாம் இழுத்துக்கொண்டே செல்ல வேண்டாம் இன்று செய்யக்கூடியதை நாளைக்கு ஒத்தி வைக்க வேண்டாம்.[14]
  • மெலிந்த உள்ளங்களுக்குச் சோம்பல் சரணாலயம் மூடர்களுக்கு அது ஓய்வு நாள்.[16]
  • செய்யத்தக்க காரியமெல்லாம் நல்ல முறையில் செய்யத்தக்கவையே.[17]
  • எத்தகைய தகுதியையும் நெடுங்காலம் மறைத்து வைக்க முடியாது. அது கண்டுபிடிக்கப் பெறும். ஒருவன் அதைத் தானே வெளிக் காட்டிக்கொண்டால்தான், அது குறைவடையும், அதற்குப் போதிய சன்மானம் எப்பொழுதும் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், பிறர் அத்தகுதியை அறிந்தேயிருப்பார்கள்.[18]
  • தெரியாமல் செய்த பிழைக்கு நாம் அனுதாபம் காட்ட வேண்டும். ஏளனம் செய்யக்கூடாது. [19]
  • ஒவ்வொரு விஷயத்தையும் நிறைவுடையதாகச் செய்ய முயற்சி செய்யவும், பெரும்பாலான விஷயங்களில் நிறைவடைவது கஷ்டமே ஆயினும் அதைக் குறிப்பாக வைத்துக்கொண்டு முயற்சி செய்பவர்கள் ஏறத்தாழ அதை எட்டிவிடுவார்கள்: மற்றவர்கள் சோம்பலினாலும், அயர்வினாலும். எடுத்துக் கொண்ட விஷயங்களை நிறைவேற்றுவது கஷ்டமென்று இடையில் கைவிட்டுவிடுவார்கள்.[20]
  • எழுத்தில் பதியத்தக்க புகழுள்ள காரியங்களைச் செய்வதற்கு அடுத்தபடியாக, ஒரு மனிதனுக்குப் பெருமையோ இன்பமோ அளிக்கும் விஷயம் படிக்கத்தக்கவைகளை எழுதுவதாகும்.[21]
  • சாதாரண அறிவுள்ள ஒரு மனிதன் பயிற்சியினாலும் கவனத்தினாலும் உழைப்பினாலும் தான் விரும்புவது போன்ற எந்த நிலையையும் அடைய முடியும். ஆனால், கவிஞனாவது மட்டும் வேறு கலையாகும்.[22]
  • உரக்கச் சிரித்தல் சாதாரண மக்களின் மகிழ்ச்சியைக் காட்டுவது. அற்ப விஷயங்களிலேயே அவர்களுக்கு ஆனந்தம் வந்து விடும்; உலகம் தோன்றிய நாள் முதல் உண்மையான புத்தி சாதுரியமோ பெருந்தன்மையோ பெருஞ்சிரிப்பை உண்டாக்குவதில்லை. நாகரிகமுள்ள கனவான் புன்னகையே புரிகிறார். அவர் சிரிக்கும் ஒளியைக் கேட்கவே முடியாது.[23]

பெண்கள் அதிக வளர்ச்சியடைந்த குழந்தைகளைத் தவிர வேறில்லை.[24]

  • எவரையும கையைப் பிடித்து இழுத்து உன் பேச்சைக் கேட்கும்படி நிறுத்தி வைக்காதே ஜனங்கள் உன் பேச்சைக் கேட்க விரும்பவில்லையானால், நீ உன் நாவை அடக்கிக் கொண்டு இருப்பதே நலம்.[25]
  • நற்பயிற்சியில்லாத அறிஞன் தற்பெருமைக்காரனாக இருப்பான். தத்துவ ஞானி குறை சொல்லிக்கொண்டேயிருப்பான். போர் வீரன் வெறும் முரடனாயிருப்பான். அது இல்லாத ஒவ்வொருவனும் வெறுக்கததககவனாயிருப்பான்.[26]

குறிப்புகள்

[தொகு]
  1. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவு. நூல் 52- 61. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 50-51. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 11-12. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  4. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 52-56. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  5. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 69-75. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  6. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 75-77. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  7. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 91-92. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  8. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 101. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  9. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 127-128. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  10. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 136-137. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  11. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 145-146. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  12. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 147-148. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  13. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 157. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  14. 14.0 14.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 162. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  15. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சிரிப்பு. நூல் 96- 98. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  16. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 202. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  17. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 191-192. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  18. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 203. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  19. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 206. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  20. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 238. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  21. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 243-244. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  22. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 255-256. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  23. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 277-278. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  24. [1]
  25. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 284. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  26. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 297-298. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=செஸ்டர்பீல்டு&oldid=36957" இலிருந்து மீள்விக்கப்பட்டது