உள்ளடக்கத்துக்குச் செல்

சிசெரோ

விக்கிமேற்கோள் இலிருந்து
(ஸிஸரோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மார்க்கசு துல்லியசு சிசெரோ (Marcus Tullius Cicero) 3 சனவரி கி.மு106 – 7 திசம்பர் கி.மு43) ஒரு பண்டைய உரோமானியரும், மெய்யியலாளரும், அரசியலாளரும், வழக்கறிஞரும், சொற்பொழிவாளரும், அரசியல் கோட்பாட்டாளரும், உரோம மன்ற உறுப்பினரும், உரோமக் குடியரசின் அரசியலமைப்பாளரும் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

 • எந்த மனிதனும் தவறுகள் செய்யலாம், ஆனால் முட்டாள் மட்டுமே அவனது தவறை தொடர்கிறான்.
 • மக்களின் பாதுகாப்பே மிக உயர்ந்த சட்டமாக இருக்க வேண்டும்.
 • உங்களை விட வேறு யாரும் உங்களுக்கு விவேகமான ஆலோசனையைக் கொடுக்க முடியாது.
 • உரையாடலின் சிறந்த கலைகளில் ஒன்று அமைதி.
 • நினைவுத்திறனே அனைத்து விடயங்களுக்குமான கருவூலமாகவும், பாதுகாவலனாகவும் இருக்கின்றது.
 • நியாயமான போரை விட நியாயமற்ற அமைதி மேலானது.
 • நன்றியுணர்வு என்பது உயர்ந்த நற்குணம் மட்டுமல்ல, அது மற்ற அனைத்து நற்குணங்களுக்கும் பெற்றோரைப் போன்றது.
 • தொடங்குவதற்கு முன்னர் கவனமாக திட்டமிட வேண்டும்.
 • நட்பே மகிழ்ச்சியை அதிகரிப்பதாகவும், துயரத்தை தணிப்பதாகவும் இருக்கின்றது.
 • புத்தகங்கள் இல்லாத வீடு, ஆன்மா இல்லாத உடலைப் போன்றது.
 • துடுக்குத்தனம் இளமைக்குச் சொந்தமானது; மதிநுட்பம் முதுமைக்குச் சொந்தமானது.
 • கவுரவம் என்பது நற்பண்பிற்கான வெகுமதி ஆகும்.
 • ஒன்றை நினைப்பதற்கு நாம் வெட்கப்படவில்லை என்றால், அதைச் சாெல்வதற்கும் நாம் வெட்கப்படக்கூடாது.
 • போர் நேரத்தில் சட்டங்கள் மௌனம் சாதிக்கின்றன.
 • மரியாதை இல்லாத திறமை பயனற்றது.

அபாயம்[தொகு]

 • அபாயத்தை அறவே விலக்குவதில் நாம் உறுதியில்லாத கோழைகள் என்று காட்டும்படி நாம் ஒரு போதும் செய்யக்கூடாது. ஆனால், அதே சமயத்தில், தேவையில்லாத முறையில் நாம் அபாயத்திற்கு உள்ளாகும்படியும் நடக்கக் கூடாது. அதைவிட அறிவீனம் வேறில்லை.[1]

அவமரியாதை[தொகு]

 • ஒருவன் சந்தர்ப்பம் அறியாமல் பேசுதலும், பேசிக்கொண்டிருக்கும் மற்றவர்களின் கவனத்தைத் தன்பால் இழுத்தலும், தன்னைப்பற்றியே பேசுதலும், தான் எவர்களுடன் இருக்கிறானோ அவர்களை மதியாமலிருத்தலும் அவனை அவமரியாதை என்ற குற்றமிழைத்தவனாகச் செய்யும்.[2]
 • ஆணவம் என்ற குற்றச்சாட்டுக்கு இடம் கொடாமலிருக்க வேண்டுமானால், நாம் செய்கின்ற வேலையில் வெட்கப்படக் கூடாது. நாம் வெட்கப்பட வேண்டிய வேலை எதையும் ஒரு போதும் செய்யக்கூடாது.[2]

அறம்[தொகு]

 • மனிதர்களுக்கு நன்மையைச் செய்வதில் மனிதர்கள் அநேகமாகத் தெய்வங்களுக்கு நிகராக ஆகின்றனர். வேறு எதிலும் இப்படி ஆக முடியாது.[3]

அறிவீனம்[தொகு]

 • ஒவ்வொருவனும் பிழை செய்யக் கூடியவனே. ஆனால் மூடனைத் தவிர வேறு யாரும் பிழையை விடாமல் பிடித்துக்கொள்ளார்.[4]

ஆன்மா[தொகு]

 • எது சிந்தனை செய்கின்றதோ, புரிந்துகொள்கின்றதோ, தீர்மானம் செய்கின்றதோ, செயல் புரிகின்றதோ, அது தெய்விகமானது. அக்காரணத்தால் அது அவசியம் நித்திய மானதாகும்.[5]

இலக்கியம்[தொகு]

 • இலக்கியம் பயில்வது இளைஞர்களுக்கு வளர்ச்சியளிக்கும். முதுமைப் பருவத்தில் விருந்தாக விளங்கும் செழுமையை அலங்கரிக்கும்; வறுமையில் ஆறுதலளிக்கும். வீட்டில் இன்பமளிக்கும் வெளியில் எங்கே செல்லவும் உரிமை அளிக்கும்.[6]

ஈகை[தொகு]

 • 'ஈதல்' -இதிலேயே மனிதன் கடவுளை ஒப்பான்.[7]

கடமை[தொகு]

 • கடமையில்லாத ஒரு கணங்கூட இல்லை.[8]

கருத்து[தொகு]

 • ஒரு மனிதன் தன்னைப்பற்றிய உலக அபிப்பிராயத்தை மதிக்காமலிருந்தால், ஆணவமாயிருப்பதோடு, ஒழுக்க கேடும் ஆகும். [9]
 • தாராள மனப்பான்மையுள்ள ஒருவன், மற்றொருவன் தன் அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டால், அவன்மீது குற்றம் சாட்டமாட்டான்.[9]

கருத்துடன் கற்றல்[தொகு]

 • இயற்கையாகப் பெருமை ஏற்படுவதைவிட அதிகமான மக்கள் கருத்துடன் கற்பதால் மேன்மையடைகின்றனர் [10]

குற்றம் காணல்[தொகு]

 • பிறர் குற்றம் காண்பதும் தன் குற்றம் மறப்பதுமே மடைமையின் விசேஷ லட்சணம்.[11]

சட்டம்[தொகு]

 • ஆயுதங்களுக்கு நடுவே சட்டங்கள் மெளனமாக இருந்துவிடும்.[12]

சுருங்கச் சொல்லல்[தொகு]

 • சட்டமன்ற உறுப்பினராயினும் சரி. பேச்சாளராயினும் சரி. ஒருவரின் பேச்சு சுருக்கமாயிருக்க வேண்டும். [13]

செய்ந்நன்றி[தொகு]

 • பெற்ற நன்றியை மறப்பவனும், பிறரிடம் மறைப்பவனும், கைம்மாறு செய்யாதவனும் செய்நன்றி கொல்லும் பாதகர்கள் இவர்களில் பெரிய பாதகன் நன்றியை மறப்பவன். [14]

சொற்கள்[தொகு]

 • நாவன்மை என்பது ஆன்மாவின் இடையீடில்லாத இயக்கமேயாகும். அலங்காரமாய்ப் பேசுவோர் நாவலர் அல்லர். பல சொல் அடுக்கிப் பாமரரை மயக்கப் பழக்கப் படுத்தப்பட்ட நாவினரேயாவர்.[15]

சொற்பொழிவு[தொகு]

 • மற்றவர்களைத் தூண்டும்படியான பொலிவுடன் ஒரு பேச்சாளன் இருக்க வேண்டும் என்பது பேச்சுக்கலையின் முதல் விதி. அதைச் செய்யவல்லது அவனுடைய வாழ்க்கையே.[16]
 • நடக்க முடியாதவர்கள் குதிரைகள்மீது ஏறிச் செல்வது போல, சொற்பொழிவாளர்கள் தங்கள் விஷயம் மிகவும் பலவீனமாயிருந்தால், அப்பொழுதுதான் மிகவும் காரசாரமாய்ப் பேசுவார்கள்.[16]

தத்துவ ஞானம்[தொகு]

 • தத்துவ ஞானம் கற்பது என்பது, 'தான்' சாகத் தயராக்குவதேயன்றி வேறன்று.[17]
 • தத்துவ ஞானத்தை ஆராய்வது ஒருவன் தன்னை மரணத்திற்குத் தயாரித்துக்கொள்வதாகும்.[18]

தவறுகள்[தொகு]

 • எந்த மனிதனும் தவறு செய்யக்கூடும்; ஆனால், முட்டாளை, தவிர வேறு எவனும் அதைத் தொடர்ந்து செய்ய மாட்டான்.[19]

நல்லதும் கெட்டதும்[தொகு]

 • தீமை செய்வதினும் தீமை பெறுதலே நலம்.[20]

நன்மை செய்தல்[தொகு]

 • மனிதர்கள் தங்களுடன் சேர்ந்த மற்ற மனிதர்களுக்கு நன்மை செய்வதிலேயே தேவர்களைப் போல விளங்குகின்றனர். வேறு எதிலும் அவ்வாறு விளங்குவதில்லை.[21]

நாகரிக நடை[தொகு]

 • ஒழுக்கத்திற்கும். காலத்திற்கேற்ற நடைக்கும் மிக நெருங்கிய சம்பந்தம் உண்டு. நமது கற்பனையில்தான் நாம் அவற்றைப் பிரித்து எண்ணுகிறோம்.[22]

நிதானம்[தொகு]

 • நீண்ட நாள் வாழ்வதற்கு நிதானமாக வாழ்தல் அவசியம்.[23]

நீதி[தொகு]

 • மனிதர்க்குத் தீங்கு செய்யாமலிருப்பது நீதி, அவர்க்குப் பிழை செய்யாதிருப்பது கௌரவத்திற்கு அழகு.[24]

பகுத்தறிவு[தொகு]

 • அறிவாளர்களுக்குப் பகுத்தறிவு கற்பிக்கின்றது. குறைந்த அறிவுள்ளவர்களுக்கு அனுபவம் கற்பிக்கின்றது. மிருகங்களுக்கு இயற்கை கற்பிக்கின்றது.[25]

வரலாறு[தொகு]

 • முன்னாளில் நடந்தவற்றை அறியாவிடில் நாம் என்னாளும் குழந்தைகளே.[26]

சான்றுகள்[தொகு]

 1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 32-33. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 2. 2.0 2.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 57-58. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 62-65. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 4. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவீனம். நூல் 61- 63. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
 5. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 96-97. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 6. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 105-106. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 7. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/ஈகை. நூல் 141-143. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
 8. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 144-145. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 9. 9.0 9.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 33-37. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 10. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 153. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 11. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/குற்றம் காணல். நூல் 71- 73. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
 12. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 171-173. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 13. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 187. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 14. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நன்றியறிதல். நூல் 82- 84. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
 15. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சொல். நூல் 85- 87. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
 16. 16.0 16.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 199-200. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 17. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/தத்துவ ஞானம். நூல் 42- 44. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
 18. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 204-205. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 19. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 206. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 20. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நன்மை-தீமை. நூல் 50- 52. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
 21. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 231. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 22. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 233-134. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 23. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 237. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 24. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 239-241. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 25. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 248-249. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 26. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/சரித்திரம். நூல் 179. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.

வெளியிணைப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=சிசெரோ&oldid=38275" இலிருந்து மீள்விக்கப்பட்டது