டான்டே அலிகியேரி
Appearance
(தாந்தே இலிருந்து வழிமாற்றப்பட்டது)
டான்டே அலிகியேரி (Dante Alighieri) என அழைக்கப்படும் துரான்டே டெக்லி அலிகியேரி (மே/ஜூன் 1265 - செப்டெம்பர் 14, 1321) மத்திய காலத்துப் புளோரன்சைச் சேர்ந்த ஒரு கவிஞர் ஆவார். இவருடைய முக்கியமான ஆக்கமான "டிவினா காமெடியா" இத்தாலிய மொழியில் எழுதப்பட்ட மிகச் சிறந்த ஆக்கமும், உலக இலக்கியத்தின் சிறந்த ஆக்கங்களில் ஒன்றுமாகும்.
மேற்கோள்கள்கள்
[தொகு]- உண்டென்றோ அல்லது இல்லையென்றோ பகுத்தறியாது பகர்வோரே மூடர்கள், அனைவரிலும் தாழ்ந்தவர்.[1]
- கலை, அதன் சக்திக்குத் தகுந்தபடி இயற்கையைப் பின்பற்றிச் செல்கிறது.[2]
- மனித சமுகம் எப்பொழுது மிக அதிகமான அளவில் சுதந்தரம் பெற்றுள்ளதோ, அப்பொழுதுதான் உச்ச நிலையில் விளங்கும். [3]
- உலகத்தின் புகழ், காற்றைப் போன்றது. ஒரு சமயம் இந்தப் புறமாக வீசும், பிறகு, அந்தப் புறமாக வீகம், திசை மாறும் பொழுதெல்லாம் அதன் பெயரும் மாறிவிடும்.[4]
சான்றுகள்
[தொகு]- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவீனம். நூல் 61- 63. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 154-155. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 185-187. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 271-273. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.