உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய மொழி

விக்கிமேற்கோள் இலிருந்து

தேசிய மொழி என்பது மக்களை நடைமுறைப்படி அல்லது சட்டப்படி அவர்கள் வாழும் நிலபகுதியின் அரசுடன் தொடர்பு கொள்ள உதவும் பொது மொழியாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  • ஒரே தேசிய மொழி என்ற தவறான நம்பிக்கையை வலியுறுத்தியதால் பாகிஸ்தான் பிரிந்ததையும், இலங்கை உள்நாட்டு போரில் மூழ்கி, இன்னமும் அதன் பாதிப்புகளில் இருந்தும் விளைவுகளிலிருந்தும் வெளிவராமல் தவித்துக்கொண்டிருப்பதையும் மறந்துவிடக்கூடாது. -ராமசந்திர குகா
  • சரக்கு உற்பத்தி முழுமையான வெற்றியடைய வேண்டுமானால், மதலாளிய வர்கம் உள்நாட்டுச் சந்தையைக் கைபற்றியாகவேண்டும். மேலும் ஒரு தனி மொழியைப் பேசக்கூடிய மக்கள் தொகையைக் கொண்ட அரசியல் வகையில் ஒன்றுபட்ட நிலப்பபரப்பு இருக்கவேண்டும். அம் மொழியில் வளரச்சி இலக்கியத்தில் திரட்டசி பெறுவதற்கான தடைகளும் ஒழிக்கபட்டிருக்கவண்டும். இதுதான் தேசிய இயக்கங்களுடைய பொருளாதார அடிப்படை. -விளாதிமிர் லெனின்[1]
  • மொழி என்பது, மனிதத் தொடர்புகளுக்கான மிக முக்கியமான சாதனமாகும். நவீன முதலாளியத்துக்கு ஏற்ற அளவில் சுதந்திரமான, விரிவான வர்த்தகம் நடைபெறுவதற்கு பல்வேறு வர்கத்தினராக உள்ள மக்கள் தொகையனர் ஒரு பரந்த தடை நீக்கப்பெற்ற ஒரே மக்கள் கூட்டமாக அமையவும், சந்தைக்கும் பெரிய சிறிய உடமையாளர அனைவருக்கும் இடையிலும் வாங்குபவனுக்கும் விறுபவனுக்கும் இடையிலும் ஒரு நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தவும் வட்டார வேறுபாடுகள் நீங்கிய ஒரே சீரான மொழியும் அதன் தங்குதடையற்ற வளர்ச்சியும் மிக முக்கியமான நிபந்தனையாக அமைகின்றன. -விளாதிமிர் லெனின்[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 இலெனின் (2017). சிந்தனையாளன் பொங்கல் மலர் 2017. சென்னை: சிந்தனையாளன். pp. 48. 
"https://ta.wikiquote.org/w/index.php?title=தேசிய_மொழி&oldid=19015" இலிருந்து மீள்விக்கப்பட்டது