ராமசந்திர குகா

விக்கிமேற்கோள் இலிருந்து
ராமசந்திர குகா

ராமசந்திர குகா (பிறப்பு 1958), சுற்றுச்சூழல், சமூகம், அரசியல் மற்றும் மட்டைப்பந்து சார்ந்த வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டு, அவற்றைப் பற்றி எழுதும் ஓர் இந்திய எழுத்தாளர்.

மேற்கோள்கள்[தொகு]

 • ஒரே தேசிய மொழி என்ற தவறான நம்பிக்கையை வலியுறுத்தியதால் பாகிஸ்தான் பிரிந்ததையும், இலங்கை உள்நாட்டு போரில் மூழ்கி, இன்னமும் அதன் பாதிப்புகளில் இருந்தும் விளைவுகளிலிருந்தும் வெளிவராமல் தவித்துக்கொண்டிருப்பதையும் மறந்துவிடக்கூடாது.
 • இந்திய அரசியல் பாரம்பரியத்தின் ஆழம் மற்றும் பன்முகத் தன்மை பற்றி இன்றைய இந்திய அரசியல்வாதிகள் அறியாதவர்களாக இருப்பது, நேரு, அம்பேத்கர், பெரியார் போன்ற சுய சிந்தனையாளர்கள், அரசியல்வாதிகள் இந்திய நாட்டில் இன்று உருவாகாமல் இருப்பது ஆகியவையே மிகுந்த கவலை அளிப்பவையாக இருக்கிறது.[1]
 • இந்தியாவின் எதிர்காலம் கடவுளின் கையில் இல்லை, சாதாரண மனிதர்களின் கையில் உள்ளது என்றே சொல்லவேண்டும்.[2]

காந்தி பற்றி[தொகு]

 • பொது விவாதங்களில் அமெரிக்காவிற்கு தாமஸ் ஜெபார்சனின் பங்கு எவ்வண்ணமோ , இஸ்லாமிய நாடுகளுக்கு குர்ரானின் பங்கு எவ்வண்ணமோ , அவ்வண்ணம் பல இந்தியர்களுக்கு காந்தியின் வாழ்வும் அவரது சொற்களும் அற விழுமியங்களின் உச்சபட்ச எல்லைகோடுகள் எனலாம்.[3]
 • படித்தவர்கள் - பாமரர்கள் என்று அனைவரிடையேயும், இறப்புக்குப் பிறகு காந்தியின் புகழ், லெனினுடைய புகழைவிட அதிகம். தார்மீக, அரசியல் முன்னோடி, வெவ்வேறு மதங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தியவர் யார் என்றால், அது அகிம்சையைப் போதித்த காந்தியாகத்தான் இருக்க முடியுமே தவிர, ‘ஆயுதம் எடுத்துப் போரிடுங்கள், வர்க்கங்களுக்கிடையே போர் நடக்கட்டும்’ என்று கூறிய லெனின் அல்ல என்பது என்னுடைய கருத்து. ( (காந்தி லெனின்: ஒரு வரலாற்று ஒப்பீடு கட்டுரையில்)[4]

நேரு பற்றி[தொகு]

 • ஜவாஹர்லால் நேரு அளவுக்கு வாழும்போது போற்றப்பட்டவர்களும், மரணத்துக்குப் பிறகு தூற்றப்பட்டவர்களும் இல்லை. தூற்றுதலுக்குப் பெரும்பாலும் உள்நோக்கம் கொண்டவர்களால் பரப்பப்பட்ட கட்டுக்கதைகளே காரணம். இந்தக் கட்டுக் கதைகளைதான் அப்பாவி மக்கள் நம்பினார்கள்.[5]

சான்றுகள்[தொகு]

 1. 6.12.2010 அன்று "நவீன இந்தியாவை வடிவமைத்தவர்கள்" என்ற அவருடைய நூலின் வெளியீட்டு விழா பேச்சில்
 2. "இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு" நூலில்
 3. Using And Abusing Gandhi எனும் கட்டுரையில் இருந்து
 4. லெனின்: ஒரு வரலாற்று ஒப்பீடு. தி இந்து. Retrieved on 30 சனவரி 2020. ராமசந்திர குஹா
 5. நேருவைப் பற்றிய 5 கட்டுக்கதைகள்
"https://ta.wikiquote.org/w/index.php?title=ராமசந்திர_குகா&oldid=17674" இலிருந்து மீள்விக்கப்பட்டது