உள்ளடக்கத்துக்குச் செல்

நரகம்

விக்கிமேற்கோள் இலிருந்து

நரகம் என்பது கெடுதல் செய்து இறந்தவர் செல்லும் ஒரு கொடிய இடமாக பல சமயங்களில் நம்பப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

 • நரகத்திற்குச் செல்ல மனிதர் எவ்வளவு சிரமம் எடுத்துக் கொள்கின்றனர். அதில் நேர்பாதி போதுமே சுவர்க்கத்திற்குச் செல்ல - அதை நல்வழியில் எடுத்துக் கொள்ளும் துணிவுமட்டுமே தேவை. -பென் ஜான்ஸன்[1]
 • நரகம் என்பது வேறெங்குமில்லை. நன்றாய் ஆராய்ந்தால், அது பாவமே யாகும். கடவுளினின்று பிரிந்திருப்பதே நரகம். -பாஸ்ட்[1]
 • நரகம் என்பது யாது? காலங் கடந்து கண்ட உண்மை; பருவம் கடந்து செய்த கடமை. -எட்வார்ட்ஸ்[1]
 • நரகத்திற்குள்ள வழி எளிது, கண்களை மூடிக்கொண்டே போகலாம். -பியன்[1]
 • நான் நரகம் உண்டென்று நம்ப மட்டும் செய்யவில்லை. நரகம் உண்டென்று அறியவும் செய்பவன். அது மட்டுமா? நரகத்துக்கு அஞ்சி அறநெறி நிற்பவர் யாவரும் நரகத்தில் கால் வைத்துவிட்டவரே என்பதையும் அறிவேன். -ரஸ்கின்[1]
 • சாஸ்திரிகளும், சாவோரும் நரகத்தைப்பற்றிப் பேசட்டும். ஆனால் நரக வேதனைகள் எல்லாம் என் இதயத்திலேயே உள்ளவை. -வில்லியம் ஷேக்ஸ்பியர்[1]
 • இயற்கையின் மிகவும் ஏகாந்தமான இடங்களைக் கானும் பொழுது, ஆயிரக்கணக்கான ஆன்மிக உரைகளில் சொல்லப்பட்டிருப்பதுபோல், நரகமும் சுவர்க்கமும் இருப்பதாகவே தோன்றுகின்றன.[2]
 • மனம் தன் இடத்தில் இருந்துகொண்டே சுவர்க்கத்தை நரகமாக்கிக்கொள்ளும், நரகத்தைச் சுவர்க்கமாக்கிக்கொள்ளும். -மில்டன்[2]
 • புண்ணியங்களுக்குச் சுவர்க்கம் ஒனறு இருககுமானால் குற்றங்களுக்கு நரகம் ஒன்று இருந்தாக வேண்டும். - காஸீன்[2]
 • குற்றமுள்ள மனச்சான்று பூமியிலுள்ள நரகம். அது தொலைவிலுள்ள நரகத்தைச் சுட்டிக் காட்டுகின்றது.[2]
 • உலகம் கரையும் பொழுது, சுவர்க்கமாயில்லாத இடமெல்லாம் நரகமாயிருக்கும். -மார்வே[2]

குறிப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நரகம். நூல் 37-38. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 229-130. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=நரகம்&oldid=21778" இலிருந்து மீள்விக்கப்பட்டது