பாட்டு
Appearance
(பாடல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஓசையுடன் தூக்கிப் பாடப்படுவது பாட்டு (song) இஃது ஒலிநயத்துடன், சொற் கோர்வைகளாக, இசை, உணர்ச்சி, கற்பனை முதலானவை வெளிப்படும் வகையில் கருத்தின் வெளிப்பாடாக வரும்.
மேற்கோள்கள்
[தொகு]- மக்களுக்குப் பாட்டைப் போல உற்சாக மூட்டுவது வேறொன்றுமில்லை. எனக்கு மட்டும் சுப்புலட்சுமியைப் போல பாட வந்தால், அதோடு எனக்கு இருப்பதாக நீங்கள் கூறும் குணங்களுமிருந்தால், நான் உலகத்தையே ஆளுவேன்.—ராஜாஜி (1947) (எட்டயபுரம் பாரதி மண்டபத் திறப்பு விழாவில்)[1]
- நன்றாக அமைந்த பாடல் தன் கருத்துப்படி மனிதனைத் திருப்புகிறது. இதுதான் பாட்டினிடத்தில் உள்ள குறிப்பிடத்தக்க மேன்மை. —பாரதிதாசன்[2]
- நான் இதுவரை நூற்றுக்கணக்கான படங்களில் பாடிவிட்டேன். இன்றுள்ள பிரபல நடிகர்கள் எல்லோருக்கும் பாடிவிட்டேன். அதில் அமுதும் தேனும் எதற்கு? என்ற பாட்டே சிறந்தது. இந்தப் பாடல் கவிஞர் சுரதா எழுதியது. சீர்காழி கோவிந்தராஜன்[3]
- இசையமைப்புக்குப் பாடல் எழுதுவதா? எழுதிய பாடலுக்கு இசை அமைப்பதா? என்று கேட்டால், இசையமைப்பு சிறப்பாக இருந்தால், அதற்குப் பாடல் அமைப்பதும், பாடல் சிறந்து விளங்கினால், அதற்கு இசை அமைப்பதும் நல்லது. சுரதா[4]
குறிப்புகள்
[தொகு]- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 41-50. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 71-80. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 91-100. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 111-120. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.