உள்ளடக்கத்துக்குச் செல்

பாட்டு

விக்கிமேற்கோள் இலிருந்து
1947 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஜாஸ் பாடகர் பில்லி ஹாலிடே பாடிய போது

ஓசையுடன் தூக்கிப் பாடப்படுவது பாட்டு (song) இஃது ஒலிநயத்துடன், சொற் கோர்வைகளாக, இசை, உணர்ச்சி, கற்பனை முதலானவை வெளிப்படும் வகையில் கருத்தின் வெளிப்பாடாக வரும்.

மேற்கோள்கள்

[தொகு]
  • மக்களுக்குப் பாட்டைப் போல உற்சாக மூட்டுவது வேறொன்றுமில்லை. எனக்கு மட்டும் சுப்புலட்சுமியைப் போல பாட வந்தால், அதோடு எனக்கு இருப்பதாக நீங்கள் கூறும் குணங்களுமிருந்தால், நான் உலகத்தையே ஆளுவேன்.—ராஜாஜி (1947) (எட்டயபுரம் பாரதி மண்டபத் திறப்பு விழாவில்)[1]
  • நன்றாக அமைந்த பாடல் தன் கருத்துப்படி மனிதனைத் திருப்புகிறது. இதுதான் பாட்டினிடத்தில் உள்ள குறிப்பிடத்தக்க மேன்மை. —பாரதிதாசன்[2]
  • நான் இதுவரை நூற்றுக்கணக்கான படங்களில் பாடிவிட்டேன். இன்றுள்ள பிரபல நடிகர்கள் எல்லோருக்கும் பாடிவிட்டேன். அதில் அமுதும் தேனும் எதற்கு? என்ற பாட்டே சிறந்தது. இந்தப் பாடல் கவிஞர் சுரதா எழுதியது. சீர்காழி கோவிந்தராஜன்[3]
  • இசையமைப்புக்குப் பாடல் எழுதுவதா? எழுதிய பாடலுக்கு இசை அமைப்பதா? என்று கேட்டால், இசையமைப்பு சிறப்பாக இருந்தால், அதற்குப் பாடல் அமைப்பதும், பாடல் சிறந்து விளங்கினால், அதற்கு இசை அமைப்பதும் நல்லது. சுரதா[4]

குறிப்புகள்

[தொகு]
  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 41-50. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  2. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 71-80. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  3. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 91-100. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  4. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 111-120. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=பாட்டு&oldid=18713" இலிருந்து மீள்விக்கப்பட்டது