உதவி

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

உதவி செய்தல் அல்லது உதவுதல் (Help) என்பது ஒரு சிறந்த பண்பாகும்.

மேற்கோள்கள்[தொகு]

 • தலைசிறந்த செயல்கள் எவை? ஒரு மனிதப் பிறவியின் மனத்தில் மகிழ்ச்சி ஊட்டுவது; நலிந்தோர்க்கு உதவுவது; வேதனைப் படுவோரின் வேதனையை தணிப்பது; புன்பட்டோருக்கு செய்ப்பட்ட அநீதிகளைக் களைவது. - லபல்
 • யாருடைய கை வாங்குவதற்கு நீள்கிறதோ அவன் மிக தாழ்ந்தவன்; யாருடைய கை கொடுப்பதற்கு நீள்கிறதோ அவன் மிக உயர்ந்தவன். - சுவாமி விவேகானந்தர்
 • அன்பு செய், உதவி செய், உன்னால் முடிந்ததை செய், ஆனால் நிபந்தனை ஏற்படுத்தாதே. - சுவாமி விவேகானந்தர்
 • நான் எல்லா உதவிகளுக்கும் என்னையே நம்புகிறேன். - கவிஞர் வர்ஜில்
 • உதவி செய்யும் உள்ளம் உள்ளவனுக்குத் தான் குற்றம் சொல்ல உரிமையுண்டு. - ஆபிரகாம் லிங்கன்
 • நண்பர்கள் இருப்பது நல்லது. ஆனால் அவர்களின் உதவியை நாடுவது நல்லதல்ல. - பெர்னார்ட்ஷா
 • பிறர் உன் விளக்கை உபயோகித்துக் கொள்ளட்டும்; அதிலுள்ள நெய்யை கொடுத்துவிட மட்டும் சம்மதியாதே. - மேட்டர்லிங்க்
 • துன்பத்தைக் கண்டு இரங்குதல் மனித இயல்பு; அதை நீக்குதல் தெய்வீகம். - சிட்னி
 • உடனே கொடுத்தவன் இரு மடங்கு கொடுத்தவன் ஆகிறான். - சைரஸ்
 • துருப்பிடித்து அழிவதை விட தேய்ந்து அழிவது சிறந்தது. - ரிச்சர்ட் கம்பர்டேன்ட்
 • மனிதர்கள் தங்கள் ஆற்றலைப் பயன்படுத்தாமல் பிறர் உதவியை எதிர்பார்த்து நிற்கிறார்கள். - மாண்டெயின்
 • உபகாரம் செய்வதற்கு செலவு ஒன்றுமில்லை. ஆனால் அதைக் கொடுத்து அனைத்தும் வாங்கலாம். -மாண்டேகு
 • நீ ஒருவனிடத்தில் உதவியாகப் பெறக்கூடியதை எக்காரணத்தை முன்னிட்டும் உரிமையாகக் கேட்காதே. - ஜே.சி.காலின்ஸ்
 • தீங்கு செய்யும் வாய்ப்பு நாளுக்கு நூறு முறை வரும்; நன்மை செய்யும் வாய்ப்பு ஆண்டு ஒரு முறை தான் வரும். - வால்டேர்
 • வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது, அது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும். - தந்தை பெரியார்

பழமொழிகள்[தொகு]

 • மணிக்கணக்கில் போதனை செய்வதை விட ஒரு கணப்பொழுது உதவி புரிதலே நலம். - சீனப் பழமொழி

வெளியிணைப்புக்கள்[தொகு]

Wiktionary
விக்சனரியில் இருக்கும் உதவி என்ற சொல்லையும் பார்க்க.
"https://ta.wikiquote.org/w/index.php?title=உதவி&oldid=14941" இருந்து மீள்விக்கப்பட்டது