பெர்சி பைச்சு செல்லி

விக்கிமேற்கோள் இலிருந்து

பெர்சி பைச்சு செல்லி அல்லது பெர்சி பைஷ் ஷெல்லி (Percy Bysshe Shelley, ஆகஸ்ட் 4, 1792 – ஜூலை 8, 1822) ஒரு ஆங்கிலக் கவிஞர். பி.பி. ஷெல்லி என்றும் இவர் அழைக்கப்படுகிறார். புனைவியல்/கற்பனையியல் இயக்கத்தின் (romantic movement) முக்கிய கவிஞர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் ஜான் கீட்ஸ் மற்றும் பைரன் பிரபு ஆகியோரின் நண்பர். இவருடைய இரண்டாவது மனைவி மேரி ஷெல்லியும் புகழ் பெற்ற புதின எழுத்தாளர்.

இவரது மேற்கோள்கள்[தொகு]

அனுபவம்[தொகு]

  • உனக்குப் பழமை தெரியும், அதிலிருந்து எதிர்காலத்திற். வேண்டிய எச்சரிக்கையைப் பெறமுடியும்; மனிதன் தன் தவறுகளிலிருந்து படிக்கிறான். அவைகளிலிருந்தே அவன் பவம் பெறுகிறான்.[1]

உண்மை[தொகு]

  • ஒன்றே உள்ளது. பல மாறி மறையும். விண்ணின் வெளிச்சம் என்றும் ஒளி தரும். மண்ணின் நிழல்கள் பறந்தோடிவிடும்.[2]

கருத்துடன் கற்றல்[தொகு]

  • நாம் படிக்கப் படிக்க, நம்மிடமிருந்த அறியாமையைக் கண்டு கொள்கிறோம்.[3]

குறிப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 29-31. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வாய்மை. நூல் 23- 29. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 153. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பெர்சி_பைச்சு_செல்லி&oldid=20840" இலிருந்து மீள்விக்கப்பட்டது