பெற்றோர்

விக்கிமேற்கோள் இலிருந்து

பெற்றோர் என்பது தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். மனித சிசுவிற்கு உயிரியல் அடிப்படையில் ஆண் - பெண் என இரண்டு பெற்றோர்கள் இருப்பார்கள். ஆண், தந்தை என்றும் பெண், தாய் என்றும் அழைக்கப்படுவர்.

மேற்கோள்கள்[தொகு]

  • கடவுளுக்கு அடுத்தபடியாக உங்கள் பெற்றோர்களைப் பேணுங்கள். - பென்[1]
  • பெற்றோர்களின் குரல்கள் தெய்வங்களின் குரல்கள். ஏனெனில், அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இறைவனின் பிரதிநிதிகளாக விளங்குகின்றனர்.[1]
  • நாம் நம் குழந்தைகளுக்குக் கற்பிப்பதுபற்றிப் பேசுகிறோம். நம் குழந்தைகளும் நமக்குப் போதிக்கின்றன என்பது நமக்குத் தெரியுமா? - திருமதி ஸிகோர்னி[1]
  • பெற்றோர் சந்தேகிப்பவராயிருந்தால், குழந்தை தந்திரமுள்ளதாக இருக்கும். - ஹாலிபர்டன்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 283. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பெற்றோர்&oldid=35301" இலிருந்து மீள்விக்கப்பட்டது