பெண்
Jump to navigation
Jump to search
பெண் பற்றிய மேற்கோள்கள் சில:
- அழகு என்பது, சில காலமே நிற்கும் கொடுங்கோலாட்சி, அதற்கு நீ அடிமையாகாதே – வால்டேர்
- பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது - ஜவகர்லால் நேரு.
- பெண்ணாய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும் - தேசிக விநாயகம் பிள்ளை.
- தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு - ஔவையார்
- பெண்ணாக ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள். - ஆஸ்கார் ஒயில்ட்
- எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர் - மகாபாரதம்
- பெண்ணின் ஒழுக்கத்தில் நம்பிக்கை இருத்திலே குடும்ப இன்பத்தின் அடிப்படை - லாண்டர்.
- பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி - வில்சன் மிசுனர்.
- பெண்களிடம் உள்ள நல்ல பண்பு அவர்களுக்குப் பாராட்டை உண்டு பண்ணுகிறது. ஆனால், அவர்களின் நல்ல நடத்தையே அவர்களைத் தெய்வங்களாக்குகிறது - வில்லியம் சேக்சுபியர்.
- வாழ்க்கை என்ற ஆற்றையோ, கடலையோ கடப்பதற்குப் பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை – காண்டேகர்
- அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல். -நெப்போலியன்
- ஒரு அழகான பெண்ணுக்கு முத்தம் கொடுத்துக்கொண்டு ஒருவன் வாகனத்தை பாதுகாப்பாக ஓட்டிச் செல்கிறான் என்றால், அவன் முழுமையான முத்தம் தரவில்லை என்று அர்த்தம்.- ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
- காதலைப் பொருத்தவரை பெண்கள்தான் நிபுணர்கள், ஆண்களெல்லாம் கற்றுக்குட்டிகள்.[1] ஃப்ரான்ஸ்வா த்ருஃபோ
- பெண்களின் எழுச்சியின்றி மாபெரும் சமூக மாற்றங்கள் சாத்தியமே இல்லை. அழகான இனம் என்று குறிப்பிடப்படும் பெண்கள், அவர்களில் அழகற்றவர்களும் உட்பட சமூகத்தில் எந்த நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கொண்டே சமூக முன்னேற்றத்தை நாம் அளவிடமுடியும். .[2] காரல் மார்க்சு
- பெண்ணுக்கு இயற்கை அளித்திருக்கும் அதிகாரம் அளப்பரியது என்பதனாலோ என்வோ நம் சட்டங்கள் பெண்களுக்குக் குறைவான அதிகாரத்தையே தருகின்றன..[3] சாமுவேல் ஜோன்சன்
- நிச்சயம் இது மிகவும் அநியாயம் 20 வயது இளைஞர்களுக்கு ஜோடியாக 60 வயது நடிகைகளைத் திரைப்படங்களில் நம்மால் காண முடிவதே இல்லை.[4] ஜார்ஜ் குளூனி
- பெண்ணாக இருப்பதென்பது மிகமிக கடினமான விசயம், ஆண்களைச் சமாளிப்பதே முதன்மையான காரியமாக இருப்பதால்.[5] ஜோசப் கொன்ராட்
- ஆண்களின் தர்க்கமெல்லாம் பெண்களின் ஒரு உணர்வுக்கு இணையாகாது.[6] வோல்ட்டேர்
- பெண்கள்தான் திண்மை; ஆண்கள் வெறும் பிரதிபளிப்பே..[7] கிர்க்கெகார்டு
- பெண் தாயாகலான் பெண்ணலன் பெரிதும் ஓம்பப்பெறல் வேண்டும். பெண்ணலன் ஓம்பப்படாத இடத்தில் வேறு எவ்வித நலனும் நிலவல் அரிது. ஒரு நாட்டுக்கு நலன் அந்நாட்டுப் பெண் மக்கள் நிலையைப் பொறுத்தே நிற்கும். திரு. வி. கலியாணசுந்தரனார்[8]
- ஒரு நாட்டின் நாகரிகம் அந்நாட்டின் பெண் மக்கள் நிலையைப் பொறுத்து நிற்கிறதென்பது எவரும் ஏற்கத்தக்க உண்மை. பெண்மக்கள் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி, இடுக்கணுமின்றிப் பிறப்புரிமை இன்பத்தை எங்கே நுகர்கிறார்களோ அல்கேயுள்ள ஆண்மக்கள் நாகரிக நுட்பம் உணர்ந்தவர்களாகிறார்கள். அந்நாடே நாகரிகம் பெற்றதாகும். திரு. வி. கலியாணசுந்தரனார்[8]
- உணர்ச்சி விஷயங்களில், இனிமேல் என்ற பிரச்சினையைப் பெண்களே சீக்கிரத்தில் கவனிக்கக் கூடியவர்கள், தன்னை ஒப்பு க்கொடுப்பது, தன்னுடைய வாழ்க்கையை ஓர் ஆண்மகனிடம் பணயமாக வைப்பது எவ்வளவு சீக்கிரத்தில் நடக்கிறதோ, அவ்வளவு விரைவிலேயே வருங் காலத்தைப் பற்றித் திட்டம் போடும் திறனும் படைத்து விடுகிறார்கள் அப் பெண்கள்.-புதுமைப்பித்தன்[9]
- கடவுளுக்கு அடுத்தபடியாக நாம் பெண்களுக்கு, காடமைப் பட்டிருக்கிறோம். முதலில் நமக்கு வாழ்வளித்தவர்கள், அவர்கள் பிறகு, அதை வாழத்தக்கதாகவும் அவர்களே செய்கின்றன - போவீ[10]
- பெரிய காரியங்கள் அனைத்திற்கும் தொடக்கத்தில் ஒரு பெண்ணின் தொடர்பு இருக்கும். -லமார்ட்டைன்[10]
- மனிதர்களுக்குள் இருக்கும் கூடுதலான வேற்றுமை வானத்திற்கும் பூமிக்கும் உள்ளது போன்றது. ஆனால், பெண்களுக்குள் உள்ள வேற்றுமை வானத்திற்கும் நரகத்திற்கும் உள்ளது போன்றது. - டென்னிஸன்[10]
- அழகுள்ள பெண் ஓர் அணியாவாள்; நல்ல பெண் ஒரு கருவூலமாவாள். - ஸாஆதி[10]
- பெண்ணின் பெருமை. அவள் உலகம் தன்னை அறியாம லிருக்கும்படி வாழ்தல். அவளது புகழ், கணவன் தன்னிடம் காட்டும் மரியாதை அவளுடைய இன்பம், குடும்பம் இன்பமா யிருப்பது. - ரூஸோ[10]
- உலகந்தான் பெண்களின் புத்தகம். அவர்கள் என்ன அறிவு பெற்றிருக்கின்றனரோ, அது படிப்பிலிருந்து வந்ததன்று. பொதுவாக உலக அனுபவத்திலிருந்து வந்ததாகும். - ரூஸோ[10]
- ஒரு பெண்ணின் முதன்மையான பெருமை. ஆடவர்கள் தன்னைபற்றி நன்மையாகவோ, தீமையாகவோ போசாமலிருக்கும்படி நடந்து கொாள்வது - பெரிக்ளிஸ்[10]
- ஆடவர்கள் மனதின் உள்ளுடணவினால் தெரிந்து கொள்வதைவிட பெண்களின் உணர்வுகள் சிறந்தவை. ஆராய்ச்சிக்கு பொருத்தமான காரணங்கள் இல்லாமலே அவர்கள் விரைவில் செய்யும் முடிவுகள், ஆடவர்கள் கவனமாக ஆராய்ந்து செய்யும் முடிவுகளைக் காட்டிலும் மேலானவை. - டபுள்யு. ஐக்மன்[10]
- பெண் ஆடவனுக்குக் காட்டக்கூடிய ஆழ்ந்த அன்பு. அவன் தன் கடமையைச் செய்வதற்கு உதவியாக நிற்றல். - முலோக்[10]
- நயமாகவும் ஆழமாகவும் இருக்கும்படி பேசுவதில் ஒரு பெண்ணைப் போல் வேறு எவருமில்லை. - விக்டர் ஹியூகோ [10]
- மனிதர்கள் பார்வையைப் பெற்றிருக்கின்றனர்; பெண்கள் உள்ளுணர்வைப் பெற்றிருக்கின்றனர். - விக்டர் ஹியூகோ[10]
- மனிதர்கள், பெண்களின் விளையாட்டுக் கருவிகள்: பெண் சைத்தானின் விளையாட்டுக் கருவி. - விக்டர் ஹியூகோ[10]
- பெண்கள் பெரும்பாலும் நம்மை விரும்பி நேசிப்பதில்லை. அவர்கள் ஒரு மனிதனைத் தேர்ந்தெடுப்பது அவனிடம் காதல் கொண்டன்று. அவன் தங்களைக் காதலிப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியாயிருப்பதால்தான்.உலகப் பொருளகள அனைததிலும் அவர்கள் அன்பைத்தான் அதிகமாய்க் காதலிக்கின்றனர். ஆண்கள் என்று தனியாக அவர்கள் விரும்பக்கூடியவர்கள் சிலரே இருப்பர். - அல்ஃபோன்ஸேகா[10]
- பெண்கள் எப்பொழுதும் அமிதமான எல்லைகளிலேயே இருப்பர். அவர்கள் மனிதர்களைவிட ஒன்று, மேம்பட்டவர்களாயிருப்பார்கள் அல்லது தாழ்ந்தவர்களாயிருப்பார்கள். - புரூயெர்[10]
- பெண். எந்தக் காற்றிலும் அசைந்தாடிக்கொண்டிருக்கும் நாணலைப் போன்றவள். ஆனால், பெரும் புயலிலும் அவள் ஒடிந்து விழமாட்டாள். - வேட்லி[10]
- உலகம் அனைத்தையும் கட்டிக் காப்பாற்றி, அமுதூட்டி வரும் நூல்கள், கலைகள், கலை மன்றங்கள் யாவும் பெண்களே. - ஷேக்ஸ்பியர்[10]
- பெண்களைப் பெருமிதம் கொள்ளச் செய்வது. அழகு; அவர்களை மிகவும் பாராட்டும்படி செய்வது, பண்பு அவர்களைத் தெய்விகமாகத் தோன்றச் செய்வது. அடக்கம். - ஷேக்ஸ்பியர்[10]
- பெண்கள் நம்மை ஆட்சி புரிகின்றனர். அவர்கள் மேலும் நிறைவுடையவர்களாக விளங்கும்படி செய்வோம். அவர்கள் எவ்வளவுக்கு அறிவொளியைப் பெறுகின்றனரோ, அவ்வளவுக்கு நாம் அறிவு பெறுவோம். பெண்களின் மனங்களைப் பயிற்சி செய்வதையே ஆடவனின் அறிவு பொறுத்திருக்கின்றது. - ஷெரிடன்[10]
- தலைசிறந்த பெண் அநேகமாக மனிதனின் வலிமையைப் பெற்றிருப்பாள் தலைசிறந்த மனிதன் பெண்ணின் நயமான இனிமையைப் பெற்றிருப்பான். - திருமதி முலோக்[10]
- மனிதன் தான் தாழ்வடையாமல் பெண்களைத் தாழ்வடையும்படி செய்ய முடியாது. தான் மேலெழாமல் அவர்களை மேல் நிலையடையும்படி செய்ய முடியாது. - மார்ட்டின்[10]
- நல்ல உடை, நடை பாவனைகளுக்குப் பெண்களுடன் சேர்ந்து வாழ்தல் முக்கியமாகும். - கதே[10]
- பெண்ணின் ஒழுக்கத்தில் நம்பிக்கையிருத்தலே குடும்ப இன்பத்தின் அடிப்படையாகும். - லாண்டர்
- பெண். உலகத்தில் செய்ய வேண்டியனவெல்லாம், ஒரு மகளாகவும். சகோதரியாகவும். மனைவியாகவும். தாயாகவும் தன் கடமைகளை நிறைவேற்ற வேண்டியதேயாகும். - ஸ்டீல்[10]
- மனிதர்களைவிடப் பெண்களுக்கு இதயமும் அதிகம், கற்பனையும் அதிகம். - லமார்ட்டைன்[10]
- ஆடவர்களின் ஆராய்ச்சி அறிவுகள் எல்லாம் பெண்களின் ஓர் உணர்ச்சிக்கு ஈடாக மாட்டா. - வால்டேர்[10]
- பெண்களைப்பற்றிய மதிபபீடே நாகரிகத்தின் சோதனையாகும். - கார்ட்டிஸ்[10]
- பெண்கள் மூடர்களாயிருக்கிறார்கள் என்பதை நான் மறுக்கவில்லை: மனிதர்களுக்குப் பொருத்தமா யிருப்பதற்காகவே சர்வவல்லமையுள்ள கடவுள் அப்படிப் படைத்திருக்கிறார். ஜார்ஜ் எலியட்[11]
- பெண்கள் அதிக வளர்ச்சியடைந்த குழந்தைகளைத் தவிர வேறில்லை. செஸ்டர்பீல்டு[11]
- நித்தியமான பெண்மை இயல்பு நம்மை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்கின்றது. -கதே[11]
குறிப்புகள்[தொகு]
- ↑ தி இந்து, பெண் இன்று இணைப்பு, 2016 அக்டோபர், 23 பக்கம் 2
- ↑ தி இந்து, பெண் இன்று இணைப்பு, 2016 அக்டோபர், 23 பக்கம் 5
- ↑ தி இந்து, பெண் இன்று இணைப்பு, 2016 அக்டோபர், 23 பக்கம் 6
- ↑ தி இந்து, பெண் இன்று இணைப்பு, 2016 அக்டோபர், 23 பக்கம் 7
- ↑ தி இந்து, பெண் இன்று இணைப்பு, 2016 அக்டோபர், 23 பக்கம் 10
- ↑ தி இந்து, பெண் இன்று இணைப்பு, 2016 அக்டோபர், 23 பக்கம் 14
- ↑ தி இந்து, பெண் இன்று இணைப்பு, 2016 அக்டோபர், 23 பக்கம் 15
- ↑ 8.0 8.1 புலவர் ஆயை. மு. காசாமைதீன் (1984). திருவிக. சென்னை: தமிழ்நாட்டு அரசு பாடநூல் கழகம். pp. 112- 118.
- ↑ முல்லை பிஎல். முத்தையா (1998). புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள். நூல் 90. முல்லை பதிப்பகம். Retrieved on 22 ஏப்ரல் 2020.
- ↑ 10.00 10.01 10.02 10.03 10.04 10.05 10.06 10.07 10.08 10.09 10.10 10.11 10.12 10.13 10.14 10.15 10.16 10.17 10.18 10.19 10.20 10.21 10.22 10.23 10.24 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 278-281. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ 11.0 11.1 11.2 தியாகி ப. ராமசாமி, குடும்பப் பழமொழிகள், 1969