உள்ளடக்கத்துக்குச் செல்

மரபு வழி

விக்கிமேற்கோள் இலிருந்து

மரபு வழி என்பது மரபணுக்களின் வழித்தோன்றல்கள். அரச பரம்பரையைக் குறிக்க இச்சொல்லை வரலாற்று ஆசிரியர்கள் பயன்படுத்துகின்றனர். இதனைக் குடி எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஆசிரியரின் வழிவந்த மாணாக்கர் பரம்பரையும் தமிழக வரலாற்றில் உண்டு. இது கருத்து மரபு. இதனைப் பரம்பரை என்றே வழங்குவர்.

மேற்கோள்கள்

[தொகு]
  • மேய்ச்சலைவிட இனம் அதிக வலிமையுள்ளது. -ஜியார்ஜ் எலியர்[1]
  • ஐரோப்பாவின் அரச பரம்பரையைப் பார்த்தால், எல்லாம் ஆதியில் வெற்றிகரமான ஒரு போர் வீரனில் போய் முடியும் என்பதைத் தவிர வேறு என்ன பார்க்கிறோம்? -வால்டர் ஸ்காட்[1]
  • மனித சமுதாயத்தின் ஆதித் தோற்றம் ஒரே மாதிரியானது நல்ல பரிசுத்தமான மனச்சாட்சியே மனிதனைப் பெருமையுடையவனாகச் செய்கின்றது. அந்தப் பெருமை வானிலிருந்து வருவது. -ஸெனீகா[1]
  • நான் இறந்தவர்களிடமிருந்து பெருமையைக் கடனாகப் பெற மாட்டேன். எனக்கோ தகுதியில்லை. -ரோ[1]
  • பரம்பரைப் பெருமையிருந்தால், நல்ல மனிதன் மேலும் புகழுடன் விளங்குகிறான்.ஆனால், இகழ்ச்சியிருந்தால், ஒருவன்,அதிகமாக வெறுக்கப்பெறுகிறான். - அடிஸன் [1]
  • பரம்பரையைக் கவனித்தால், சில மனிதர் தம் முன்னோர்களின் நிழல்களாக விளங்குகின்றனர். -லூகான்[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 256. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=மரபு_வழி&oldid=28240" இலிருந்து மீள்விக்கப்பட்டது