உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோசப் அடிசன்

விக்கிமேற்கோள் இலிருந்து
(அடிஸன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜோசப் அடிசன் (1, மே 1, 1672 - 17, சூன் 1719) ஆங்கிலேய அரசியல்வாதி மற்றும் எழுத்தாளர் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • உண்மையான குற்றங்கள் என்று கருத முடியாதவைகளில், அடிக்கடி மாறும் இயல்பைப் போல், ஒரு மனிதனை அருவருக்கத்தக்கவனாயும். உலகோர் அற்பனாயும் கருதும்படி செய்வது வேறு எதுவுமில்லை. முக்கியமாகச் சமய மாறுதலோ கட்சி மாறுதலோ இத்தகையது. இந்த இரண்டு விஷயங்களிலும் ஒரு மனிதன் தான் மாறுவது கடமை என்று உணர்ந்த போதிலும், அவன் விட்டுப் பிரியும் பழைய நண்பர்கள் அவனை வெறுப்பார்கள். அவன் போய்ச் சேரும் புதிய நண்பர்களும் அவனை ஆர்வத்துடன் வரவேற்ப தில்லை.[1]
  • தன் எதிரியை இழிவு செய்வதற்காக ஏதாவது கதைகளைக் கட்டுவதற்குத் தேவையான கற்பனா சக்தி இல்லாதவன் எவனுமில்லை.[2]
  • மனிதனை அறிவாளியாகச் செய்ய முடியாத அறிவின் பெரும் பகுதி. அவனை ஆணவம் பிடித்தவனாயும் பயனற்றவனாயும் செய்துவிடுகின்றது.[3]
  • மனிதர்கள் தாங்கள் எல்லாரும் அனுபவித்து வரும் துயரத்தைக் குறைத்துக்கொள்வதற்குத் தமக்குள் அன்பு பரோபகாரம், இரக்கம் ஆகியவைகளைக் கைக்கொண்டாடி, மானிட வாழ்க்கையிலுள்ள பாதித் துயரம் குறைந்துவிடும்.[4]
  • நம்முடைய தற்போதைய நிலைக்குத் தக்கபடி நாம் நம் ஆசைகளைச் சுருக்கிக் கொள்ள வேண்டும். இது வாழ்க்கையின் அவசியமான ஒரு விதியாகும். எதிர்பார்ப்பவைகள் எப்படியிருப்பினும் நம்மிடம் உள்ளவைகளுக்குத் தக்கபடி நாம் வாழ்ந்து வர வேண்டும்.[5]
  • தீய குணம் படைத்தவனைவிட ஆராய்ச்சியில்லாதவன் அதிகக் கேடு செய்துவிடுவான். முதலாமவன் தன் பகைவனை மட்டும் தாக்குவான் மற்றவன் பகைவர், நண்பர் எல்லாருக்கும் வேற்றுமையின்றிக் கேடு செய்வான். [6]
  • அளவு கடந்து அனுபவித்தாலும் சன்மார்க்க உணர்ச்சிக்கும் சமய உணர்ச்சிக்கும் கேடு உண்டாக்காத புலனுகர்ச்சி இசையொன்றே.[7]
  • இசை மக்கள் அறிந்த மகத்தான நன்மை. உலகில் காணும் சொர்க்கம் முழுவதும் அதுவே.[7]
  •  நிரீச்வர வாதம் எந்தப் பெரிய உண்மைகளை மறுக்கிறதோ அவற்றையெல்லாம் பெறுவதற்கு வேண்டிய நம்பிக்கையைப் பார்க்கிலும் மிக அதிகமான நம்பிக்கை வேண்டும் ஒருவன் நிரீச்வரவாதியா யிருப்பதற்கு.[8]
  • உடற்பயிற்சியால் நெஞ்சு விரிகின்றது. உறுப்புகள் பயிற்சி பெறுகின்றன. குத்துச்சண்டை செய்வதன் பயன் கிடைக்கின்றது. ஆனால், அதில் கிடைக்கும் குத்துகளும் இல்லை.[9]
  • உரையாடலின் நடுவில் கூறப்பெறும் உருவகக் கதைகள் ஒளிப்பிழம்புகள் போன்றவை. ஆனால், அவை நன்கு தேர்ந்தெடுத்தவைகளாக இருக்க வேண்டும். அவை எல்லா விஷயங்களையும் தெளிவாகவும் அழகாகவும் காட்ட உதவுகின்றன.[10]
  • விலங்குகளுக்குள்ள இந்த இயற்கை அறிவுக்கு மேலாக இயற்கையில் காணும் அறிவு கடந்த விஷயம் எதுவுமில்லை என்பது என் கருத்து. இந்த உணர்வு பகுத்தறிவுக்கு மேலே தோன்றுவது. ஆயினும், அதைவிட மிகவும் தாழ்ந்தது.[11]
  • பொய்யும் சூதும் முளையாத தேசமில்லை. அவற்றிற்கு எந்த சீதோஷ்ண ஸ்திதியும் ஆகும்.[13]
  • ஒரு மனிதன் ஒழுக்கமும் உண்மையும் தன் பக்கத்தில் மட்டுமே இருப்பதாக நம்புவது அறிவீனமும், நேர்மையின்மையும் ஆகும். [14]
  • என் கௌரவத்திற்குக் கேடு வருவதைவிடப் பதினாயிரம் மரணங்களை வரவேற்கிறேன்.[15]
  • சிரிப்பே மனிதனை மற்றப் பிராணிகளினின்றும் வேறுபடுத்திக்காட்டும் செயலாகும்.[16]
  • வாழ்க்கை என்பது என்ன? வெளியே கற்றி நடப்பதும். நல்ல காற்றைச் சுவாசிப்பதும், உயரே சூரியனைப் பார்ப்பதும் அன்று. சுதந்தரமாயிருப்பதே வாழ்க்கை.[17]
  • நன்றியறிதலைப் போன்ற இன்பகரமான மனோதர்மம் வேறொன்றுமில்லை. இதர அறங்களை அனுஷ்டிப்பதில் கஷ்டம் உண்டு. இதிலோ அணுவளவு கஷ்டமும் கிடையாது.[18]
  • நீதிபதிகள் சாதுரியமாயிருப்பதைவிட அதிகம் கற்றவர்களாய் இருக்கவேண்டும். வழக்கை ஆராய்வதைவிட மரியாதையுள்ளவர்களாயும், தாமே நம்பி உறுதி செய்வதைவிட அதிக ஆலோசனை கேட்பவர்களாயும் இருக்க வேண்டும்.[19]
  • கட்சி, நட்பு உறவு ஆகியவற்றையெல்லாம் நீதி ஒதுக்கிவிடுகின்றது. அதனாலேயே அது (நீதி தேவதை) குருடாயிருப்பதாகச் சித்திரிக்கப்பெறுகின்றது.[19]
  • நீதிக் கதைகள், போதனை செய்தவன் கடுமையைக் குறைத்து விடுகின்றன. ஆனால், அதை மறைத்து விருப்பமான வருவத்தில் போதித்துவிடுகின்றன.[20]
  • நூற் சுவை அறிவு என்பது யாது? நூல்களின் குணங்களைச் சந்தோஷத்தோடும், குற்றங்களை வருத்தத்தோடும் காணும் மனப்பான்மையே ஆகும். [21]
  • புத்தகங்கள் மனித சமூகத்திற்காகப் பேரறிஞர்கள் விட்டுச் சென்றுள்ள பிதுரார்ஜிதமாகும். அதைத் தலைமுறை தலை முறையாக இனி வரப்போகும் சந்ததியார்களுக்கு அளித்துவர வேண்டும்.[22]
  • படைப்பிலே தலைசிறந்த இன்பமுள்ளவன் மனிதன்தான். அவனுக்கு மேலும் கீழும் உள்ளவை அனைத்தும் விசனமுள்ளவை. [23]
  • பரம்பரைப் பெருமையிருந்தால், நல்ல மனிதன் மேலும் புகழுடன் விளங்குகிறான்.ஆனால், இகழ்ச்சியிருந்தால், ஒருவன்,அதிகமாக வெறுக்கப்பெறுகிறான்.[24]
  • உணவு முதலியவற்றில் நிதானமும், உடற்பயிற்சியும் இல்லாததற்குப் பதிலாகத்தான் மருந்துகளை உபயோகிக்கிறோம்.[25]
  • வாழ்க்கைத் திட்டங்களைப்பற்றி உறுதியின்மையும். அவைகளை இடைவிடாமல் பின்பற்றிச் செல்லாமையும் நம் துயரங்களுக்கெல்லாம் உரிய காரணங்களுள் முதன்மையானவை.[26]

குறிப்புகள்

[தொகு]
  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் -16. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 52-56. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 69-75. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  4. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 78-81. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  5. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 83-85. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  6. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 88. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  7. 7.0 7.1 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/இசை. நூல் 158-159. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  8. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நிரீச்வர வாதம். நூல் 37. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  9. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 118. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  10. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 125. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  11. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 131. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  12. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கல்வி. நூல் 150-157. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  13. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/குற்றம் காணல். நூல் 71- 73. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  14. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 168. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  15. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 170. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  16. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சிரிப்பு. நூல் 96- 98. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  17. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 185-187. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  18. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நன்றியறிதல். நூல் 82- 84. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  19. 19.0 19.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 239-241. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  20. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 242. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  21. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நூற் சுவை. நூல் 172-174. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  22. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 274-276. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  23. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 293-294. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  24. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 256. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  25. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 298. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  26. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 299. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜோசப்_அடிசன்&oldid=35519" இலிருந்து மீள்விக்கப்பட்டது