உள்ளடக்கத்துக்குச் செல்

மூடநம்பிக்கை

விக்கிமேற்கோள் இலிருந்து

மூடநம்பிக்கை என்றால் ஒரு விடயத்தை அல்லது பொருளை அதன் உண்மைத் தன்மைக்கு எதிராகச் சரி என்றோ அல்லது பலன்களுக்கு எதிராகப் பலன் தரும் என்றோ நம்புதல் ஆகும்.

தேற்கோள்கள்

[தொகு]
  • மூட நம்பிக்கை மனித அமைப்பிலேயே ஓர் அம்சம். அதை ஓட்டிவிட்டோம் என்று மனோராஜ்யம் செய்யும்பொழுது அது நம் மனத்தில் ஒரு மூலையில் பதுங்கியிருக்கும். தனக்கு அபாயம் வராது என்ற நிலைமையில் திடீரென்று வெளியேறும். -கதே[1]
  • மூட நம்பிக்கை பயந்து பதுங்கும்; அதனிடம் அதர்ம நினைவே அதிகம்; கடவுளிடம் நம்பிக்கை கிடையாது துர்த் தேவதைகளை அஞ்சி நடுங்கும். - நியூமன்[1]
  • உலகிலே மிகப்பெரிய சுமையாக விளங்குவது மூட நம்பிக்கைதான். தேவாலயத்தின் சடங்குகள் மட்டுமன்றி கற்பனையாகப் பாவங்களைப்பற்றிய பயங்களும் அதைச் சேர்ந்தவை. - மில்டன்[2]
  • இழிவான ஆன்மாக்கள் பின்பற்றக்கூடிய மதம் மூட நம்பிக்கை. ஒன்றுதான். - ஜோபொட்[2]
  • குதிரை ஒட்டகத்தைக் கண்டால் அஞ்சி நடுங்காமலிருக்க முடியவில்லை; இது போலவே, ஒரு குடியானவன் மாமூலான தன் முட நம்பிக்கைப்படி நடக்காமலிருக்க முடியாது. - ஜியார்ஜ் எலியட்[2]
  • மக்கள்தாம் மூடநம்பிக்கைக்குக் குருமார்கள். எல்லா மூட நம்பிக்கைகளிலும் அறிவாளிகள் மூடர்களைப் பின்பற்றுகின்றனர். - பேக்கன்[2]
  • பலவீனம். பயம், துக்கம், அறியாமை ஆகியவை மூட நம்பிக்கையின் உற்பத்தி ஸ்தானங்கள், - ஹியூம்[2]

குறிப்புகள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. 1.0 1.1 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/மூட நம்பிக்கை. நூல் 63. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 304-305. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=மூடநம்பிக்கை&oldid=35666" இலிருந்து மீள்விக்கப்பட்டது