வெற்றி
Appearance
வெற்றி குறித்து அறிஞர்கள் சொன்ன பொன்மொழிகள்
- வெற்றியின் வாசல்படி உழைப்பு மட்டுமே. - கார்லைல்[1]
- துணிச்சல் + உழைப்பு = வெற்றி -பெர்னாட்ஷா[1]
- உள்ளத்தின் உறுதியே வெற்றியின் வித்தாகும். -நெப்போலியன்[1]
- நல்ல தொடக்கம் பாதி வெற்றிக்கு சமம். -ஹில்[1]
- வெற்றி உழைப்பவர்களின் பரிசாகும். -ஆர்தர்[1]
- முயற்சிக்கேற்ப வெற்றி அமையும். -டிரைடன்[1]
- எதையும் தாங்குபவனே வெற்றி அடைவான். -பெரிசியஸ்[1]
- ஒரு மதிப்பு வாய்ந்த இலக்கைப் படிப்படியாக அடைதலே வெற்றி. -நைட்டிங்கேல்[1]
- வெற்றி பெற முடியுமென்று நம்புவோரே வெல்வார்கள். -வெர்ஜில்[1]
- ஒவ்வொரு மனிதனும் தனக்குத் தானே தேர்ந்தேடுத்துகொள்ளும் ஒவ்வொரு செயலின் குணங்களைப் பொறுத்துதான் அவனுடைய எதிர்கால வெற்றி தோல்விகள் கணிக்கப்படும். - டார்வின் [2]
- வெற்றி என்னைத் தேடிவரவில்லை; நான் என் இடையறா முயற்சியால் வெற்றியைத் தேடிப் பிடித்துக் கொண்டேன். முதலில் சிறு பாவங்களாகச் செய்யத் தொடங்குவோம் என்று தீர்மானித்துக் கொண்டு, நான் எனது நாடகங்களை எழுதத் தொடங்கினேன். ஜோர்ஜ் பெர்னாட் ஷா[3]
- எதையும் சிர்தூக்கி ஆராய்ந்து அளவிட்டு, ஆற அமர ஆலோசித்து செய்வதால்தான் பலர் தங்கள் திட்டங்களில் வெற்றியடைகிறார்கள். -நிக்கோலோ மாக்கியவெல்லி[4]
- எளிதாயுள்ள வெற்றிகள் மதிப்பற்றவை. கடுமையான போராட்டத்தினால் வருபவைகளே மதிப்புயர்ந்த வெற்றிகள். - பீச்செர்[5]
- கடவுளின் புன்னகையே வெற்றி. - விட்டியர்[5]
- வெற்றியை வெகுதூரம் தொடர்ந்து செல்ல வேண்டாம் எதிரியைப் புறமுதுகு காட்டி ஓடும்படி செய்ததே சிறந்த வெற்றிதான். ஓடுகிறவனை இறுதியான உறுதியுடன் திரும்பி நின்று எதிர்க்கும்படி விரட்ட வேண்டாம். அதனால் உனக்குத் தீங்கு நேரிடும். - ஹெர்பெர்ட்[5]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 தினமனி 2016 சூலை 30
- ↑ http://www.ponmozhigal.com/2016/08/blog-post_87.html
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 101-110. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ நாரா. நாச்சியப்பன் (1993). சிந்தனையாளன் மாக்கியவெல்லி. நூல் 149-162. பிரேமா பிரசுரம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ 5.0 5.1 5.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 317-318. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.