உள்ளடக்கத்துக்குச் செல்

வைகறை

விக்கிமேற்கோள் இலிருந்து

வைகறை (Dawn) அல்லது விடியற் காலை சூரியோதயத்திற்கு முன் ஏற்படும் மெல்லொளிக்கு முன்னான நேரமாகும். இக்காலம் முன் சூரியோதய சந்தியொளி அல்லது சூரியோதய காலம் எனவும் அழைக்கப்படும்.

மேற்கோள்கள்

[தொகு]
  • காலையில் அதிக நேரம் படுக்கையில் படுத்திருக்கும் எவரும். பெருமையோ புகழோ பெற்றதை நான் கண்டதில்லை. - ஸ்விஃப்ட்[1]
  • பெரிய வேலைகளை நிறைவேற்ற வேண்டியவர்கள் அதிகாலையில் எழுந்திருக்கவேண்டும். தூக்கத்தில் பற்று வைக்க வேண்டாம். வைத்தால், வறுமை வந்துவிடும். எம். ஹென்றி[1]
  • ஒவ்வொரு நாள் இரவிலும் மறுநாள் காலையில் விரைவாக எழுந்திருக்கவேண்டுமென்று நான் மனத்தில் உறுதி கொள்வேன். ஆனால், ஒவ்வொரு நாள் காலையிலும். நான் உடலைக் கட்டிலிலேயே சாய்த்துக்கொண்டிருப்பேன்.
  • அதிகாலையில் வீசும் மென்காற்றை அனுபவித்தவர்களுக்கு. ஒரு நாளில் மிக இனிய நேரம் அதுவே என்பதும், உற்சாகமாக வேலை செய்யக்கூடிய நேரம் என்பதும் தெரியும். ஆனால், பொதுவாக அந்த நேரத்தைப் படுக்கையிலே கிடந்து வீணாக்குகிறோம்; இயற்கையின் நோக்கம் நாம் அந்த நேரத்தில் மிகுந்த பயனடைய வேண்டும் என்பது. - ஸதே[1]
  • ஒரு மனிதன் தினந்தோறும் ஒரே நேரத்தில் இரவில் படுக்கச் செல்வதாக வைத்துக்கொண்டால், காலையில் ஐந்து மணிக்கு எழுவதிலும். ஏழு மணிக்கு எழுவதிலும் உள்ள வேற்றுமையால், நாற்பது ஆண்டுகளில், சுமார் பத்து ஆண்டுகள் மனிதன் வாழ்க்கையில் கூடுதலாகும். - டாட்ரிட்ஜ்[1]
  • கதிரவன் உதயமாகு முன்னால் எழுந்துவிடுதல் நலம், இத்தகைய பழக்கங்கள் ஆரோக்கியத்திற்கும். செல்வத்திற்கும். அறிவு விருத்திக்கும் நல்லவை. - அரிஸ்டாட்டில்[1]
  • வைகறையில் எழுந்திராதவர்களுள் சிலரே நீண்ட காலம் வாழ்ந்துள்ளனர். அவர்களுள்ளும் சிலரே பிரசித்தியாக வாழ்ந்திருப்பவர். - ஜே. டாட்[1]
  • உன் கட்டிலின் திரைகளிலும் அறையின் கவர்களிலும் இதை எழுதி வைத்தல் நலமென்று நான் கருதுகிறேன். 'அதிகாலையில் எழுந்திராவிட்டால், நீ எதிலும் முன்னேற மாட்டாய்! - சாதாம் பிரபு[1]
  • ஒருவன் கட்டிலில் புரண்டுகொண்டிருக்கும் நேரமே வெளியே சென்றுகொண்டிருக்க வேண்டிய நேரம். - வெல்லிங்டன்[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 319-320. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=வைகறை&oldid=36328" இலிருந்து மீள்விக்கப்பட்டது