ஜிசொப்பி மாசினி
Appearance
ஜிசொப்பி மாசினி (Giuseppe Mazzini 22 சூன் 1805–10 மார்ச்சு 1872) என்பவர் இத்தாலிய அரசியலாளர், இதழாளர் மற்றும் செயற்பாட்டாளர் ஆவார். இத்தாலி ஒற்றுமையுடன் இருப்பதற்கும் உரிமை பெறுவதற்கும் பாடுபட்டவர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- இவர் அனைத்தையும் தியாகம் செய்தார்; அவ்வளவு அதிகமாக அதைச் செய்தார்; அதிகமாக மன்னிக்கவும் இரங்கவும் செய்தார். யாரையும் துவேசித்ததில்லை. -மாஜினி கல்லறைமீது[2]
- உழைப்பு நாம் உயிர் வாழ்வதற்கான தெய்விகச் சட்டம், ஓய்ந்திருத்தல் துரோகமும், தற்கொலையுமாகும்.[3]
- நிலையான உறுதிதான் மற்ற பண்புகளுக்கெல்லாம் துணையாகும்.[4]
- கல்வியே ஆன்மாவின் உணவு, அஃதின்றேல் நம் சக்திகள் எல்லாம் ஸ்தம்பித்து நின்றுவிடும், பயன்தரா.[5]
- கல்வியும் வாளுமே ஒரு தேசம் புத்துயில் பெறுவதற்கும் விடுதலை பெறுவதற்குமான இரண்டு சாதனங்கள் ஆகும்.[5]
- இறைவனின் சட்டப்படி அவன் மனித சமூகத்திற்கு அளித்துள்ள அந்தச் சட்டத்தின்படி எல்லா மனிதர்களும் சுதந்தரமானவர்கள், சகோதரர்கள், சமத்துவமானவர்கள்.[6]
- தன்னைப் பிறர்க்காகத் தியாகம் செய்தல் சகல சமயங்களுக்கும் அழியாத அஸ்திவாரம்- அது ஒன்றே சாஸ்வதமான உண்மையறம்.[7]
- இலட்சியம் சீக்கிரமாகப் பழுத்துப் பயன் தருவது, தியாகம் செய்வோருடைய இரத்தம் பாய்ந்து போஷிக்கப்படும் பொழுதுதான்.[7]
- ஜன சமூகங்கள் வாழலாம், அல்லது வாழாமல் மடியலாம். ஆனால் நாகரிகம் மட்டும் ஒருநாளும் மறைந்து விடாது.[8]
- என் மனத்துக்குகந்த நூல்களை மட்டும் கொடுத்து என்னை என் வாழ்வு முழுவதும் சிறையிட்டாலும் நான் கஷ்டப்படமாட்டேன்.[9]
- வறுமையை நீக்க சதாகாலமும் பாடுபடுகிறவன் சன்மார்க்க அபிவிருத்தி காண முடியாது.[10]
குறிப்புகள்
[தொகு]
- ↑ The Italian Unification
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சான்றோர். நூல் 67 - 69. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 128-129. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 132. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ 5.0 5.1 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கல்வி. நூல் 150-157. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 174-175. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ 7.0 7.1 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/தியாகம். நூல் 149-150. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நாகரீகம். நூல் 98- 99. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நூல்கள். நூல் 163-168. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வறுமை. நூல் 107- 108. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.