முயற்சி
Appearance
- விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம்; இல்லையேல் உரம்.
- முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!
- நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.
- ஒவ்வொரு மனிதனும் செத்துப்போவது உண்மைதான். என்றாலும், அவனோடு அவனுடைய முயற்சிகளும் அவன் துவக்கிய காரியங்களும் செத்துப்போய்விடுவதில்லை! -பெரியார் செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.
- முயற்சியை எவனொருவன் கைவிடுகிறானோ,அப்போதே அவன் திறமை அவனிடமிருந்து போய் விடுகிறது -எமர்சன்
- எல்லோருமே உலகை மாற்றிவிடத் துடிக்கின்றனர். ஆனால், எவரும் முதலில் தங்களை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பதில்லை! -லியோ டால்ஸ்டாய்
- எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள். - ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
- சுதந்திரம் என்பது கொடுக்கப்படுவதல்ல; எடுக்கப்படுவது! - நேதாஜி
- உலகில் யாரும் தெய்விகக் குணங்களுடன் பிறப்பது இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பொருத்துதான் முன்னேற்றமோ வீழ்ச்சியோ ஏற்படுகிறது! -அம்பேத்கர்
- இருட்டை சபித்து கொண்டிருப்பதை விட்டு விட்டு ஒரு மேழ்குவர்த்தியை ஏற்றுங்கள். -கான்பூஷியஸ்.
- நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை வறுமைக்குள் தள்ளிவிடும். —இங்கர்சால்
- முயற்சியே உங்களை எழுந்துநின்று பேசச்செய்யும்,
அதுவே உங்களை உட்கார்ந்து செவிமடுக்கவும் செய்யும்.[1][2][3] - வின்சுடன் சேர்ச்சில் - எதுவும் தானாக வருவதில்லை. நல்லது. எதுவும் நிச்சயமாக வருவதில்லை. எல்லாவற்றையும் நாமே கொண்டுவர வேண்டும். - ஸி. பர்ட்டன்[4]
- நாம் இடைவிடாமல் நம் புலன்கள், புத்தி, ஒழுக்கமுறை. உடல் ஆகியவை சம்பந்தமான கருவிகளை உபயோகித்துக்கொண்டே இருந்தால்தான். அவை துருப்பிடியாமல் இருக்கும். பயனற்றுப் போகாமல் இருக்கும். - ஸி. ஸிம்மன்ஸ்[4]
சான்றுகள்
[தொகு]- ↑ Winston Churchill (in ஆங்கிலம்). Retrieved on 2, 2014. Retrieved on 4, 2014.
- ↑ Winston Churchill (in ஆங்கிலம்). Retrieved on 2, 2014. Retrieved on 4, 2014.
- ↑ Winston Churchill (in ஆங்கிலம்). Retrieved on 5, 2014. Retrieved on 4, 2014.
- ↑ 4.0 4.1 4.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 303. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.