முயற்சி

விக்கிமேற்கோள் இலிருந்து
 • விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம்; இல்லையேல் உரம்.
 • முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!
 • நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.
 • ஒவ்வொரு மனிதனும் செத்துப்போவது உண்மைதான். என்றாலும், அவனோடு அவனுடைய முயற்சிகளும் அவன் துவக்கிய காரியங்களும் செத்துப்போய்விடுவதில்லை! -பெரியார் செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.
 • முயற்சியை எவனொருவன் கைவிடுகிறானோ,அப்போதே அவன் திறமை அவனிடமிருந்து போய் விடுகிறது -எமர்சன்
 • எல்லோருமே உலகை மாற்றிவிடத் துடிக்கின்றனர். ஆனால், எவரும் முதலில் தங்களை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பதில்லை! -லியோ டால்ஸ்டாய்
 • எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள். - ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
 • சுதந்திரம் என்பது கொடுக்கப்படுவதல்ல; எடுக்கப்படுவது! - நேதாஜி
 • உலகில் யாரும் தெய்விகக் குணங்களுடன் பிறப்பது இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பொருத்துதான் முன்னேற்றமோ வீழ்ச்சியோ ஏற்படுகிறது! -அம்பேத்கர்
 • இருட்டை சபித்து கொண்டிருப்பதை விட்டு விட்டு ஒரு மேழ்குவர்த்தியை ஏற்றுங்கள். -கான்பூஷியஸ்.
 • நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை வறுமைக்குள் தள்ளிவிடும். —இங்கர்சால்
 • முயற்சியே உங்களை எழுந்துநின்று பேசச்செய்யும்,
  அதுவே உங்களை உட்கார்ந்து செவிமடுக்கவும் செய்யும்.[1][2][3] - வின்சுடன் சேர்ச்சில்
 • எதுவும் தானாக வருவதில்லை. நல்லது. எதுவும் நிச்சயமாக வருவதில்லை. எல்லாவற்றையும் நாமே கொண்டுவர வேண்டும். - ஸி. பர்ட்டன்[4]
 • ஒவ்வொரு மனிதனுடைய வேலையும் அவன் உயிரைக் காத்து வருகின்றது. - எமர்சன் [4]
 • நாம் இடைவிடாமல் நம் புலன்கள், புத்தி, ஒழுக்கமுறை. உடல் ஆகியவை சம்பந்தமான கருவிகளை உபயோகித்துக்கொண்டே இருந்தால்தான். அவை துருப்பிடியாமல் இருக்கும். பயனற்றுப் போகாமல் இருக்கும். - ஸி. ஸிம்மன்ஸ்[4]

சான்றுகள்[தொகு]

 1. Winston Churchill (in ஆங்கிலம்). Retrieved on 2, 2014. Retrieved on 4, 2014.
 2. Winston Churchill (in ஆங்கிலம்). Retrieved on 2, 2014. Retrieved on 4, 2014.
 3. Winston Churchill (in ஆங்கிலம்). Retrieved on 5, 2014. Retrieved on 4, 2014.
 4. 4.0 4.1 4.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 303. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=முயற்சி&oldid=35623" இலிருந்து மீள்விக்கப்பட்டது