உள்ளடக்கத்துக்குச் செல்

கோபம்

விக்கிமேற்கோள் இலிருந்து

கோபம் (Anger) என்பது மனிதர்களுக்கிடையே தோன்றும் கடுமையான உணர்ச்சியாகும். இது சிறிய எரிச்சல் அளவில் இருந்து கடுமையான வெறி கொண்டதாக இருக்கலாம்.

மேற்கோள்கள்

[தொகு]
  • கோபப்படுவது என்பது யாருக்கும் எளிது. ஆனால் சரியான நபர் மீது சரியான அளவில் சரியான நேரத்தில் சரியான நோக்கத்துடன் கோபப்படுவது எல்லோருக்கும் வராது. - அரிசுடோடில்
  • நல்ல மனிதன் பொறுமையைக் கடைப்பிடிப்பான். - மகாவீரர்
  • உங்களில் பலசாலி யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? கோபம் வரும் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவரே பலசாலியாவார். - முகமது நபி
  • கோபம் விசம் குடிப்பதைப் போன்றது, ஆனால் நம்பிக்கை உங்கள் எதிரிகளையும் அழிக்கும் வல்லமை மிக்கது. - நெல்சன் மண்டேலா
  • கோபம் கூடாது. அது முகத்தின் அழகைக் கெடுத்து விடுகிறது. சாந்தமே முகத்திற்கு அழகு தருகிறது. - இராஜாஜி
  • அன்பில்லாத இடத்தில் தான் கோபம், முட்டாள் தனம், விரோதம் எல்லாம் இருக்கும். - இங்கர்சால்
  • இந்த உலகத்தில் அநீதி தலையெடுக்கிற போதெல்லாம் கோபமும் வெறுப்பும் கொண்டு நீ குமுறி நடுங்குவாயானால் நாம் இருவரும் தோழர்கள். அதுதான் முக்கியமான விஷயம். - சே குவேரா
  • கோபம் வரும்போது இரவும் பகலும் கடுமையாக உழைக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களிடமுள்ள அதிக அளவு சக்தியை இப்படிப் பயனுள்ள வழிகளில் செலுத்த இது ஒரு நல்ல வழி. கோபமும் குறையும். - ஹெச். ஹில்
  • உணர்ச்சிகளுள் கோபமே எவ்வித வலுவும் இல்லாதது. அதனால் பயனொன்றும் விளைவதில்லை. எதிரியைக் காட்டிலும். அதைக் கொண்டவனுக்கே அது அதிகத் தீங்கிழைப்பதாகும். - கிளாரண்டன்[1]
  • பிறரிடம் பழி வாங்க எண்ணுவதற்கோ, நமக்கு இழைக்கப்பெற்ற தீங்குகளை நினைத்துப் பார்க்கவோ, வாழ்க்கையில் நேரமில்லை. அது மிகச் சுருக்கமானது. - சார்லட் பிரான்டி[1]
  • கோபத்திற்குச் சிறந்த மருந்து தாமதித்தல். - ஸெனீகா[1]
  • அமைதியாயிரு. நீ எவரையும் வசப்படுத்திக்கொள்ள முடியும். - ஸெயின்ட் ஜஸ்ட் [1]
  • கோபம் வெறிகொண்ட குதிரையைப் போல் துள்ளிப் பாய்கையில், இடையில் தடுக்கி விழும். -ஸாவேஜ்[1]
  • வெளியே காட்டிய கோபம் மன்னிப்புக்கு வழி தேடும். உள்ளேயடக்கிய கோபம் பழிக்கு வழி தேடும். - புல்வெர்[1]
  • நீ கோபமாயிருந்தால். நீ பேசத் தொடங்குமுன் பத்துவரை எண்ணு. அதிகக் கோபமாயிருந்தால் நூறுவரை எண்ணு. -ஜெஃபர்ஸன்[1]
  • உணர்ச்சி அரியணையில் அமர்ந்திருக்கும் பொழுது அறிவு வெளியே போய்விடும். -எம். ஹென்றி[1]
  • பொறுமையுள்ள மனிதனின் கோபத்தைப்பற்றி எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.[1]

பழமொழிகளும் சொலவடைகளும்

[தொகு]
  • எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
  • ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.
  • கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
  • மிகக் கூர்மையாக இருக்க விரும்பாதீர்கள்; உங்களையே வெட்டிக்கொள்வீர்கள். - இத்தாலி பழமொழி

வெளியிணைப்புக்கள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


Wiktionary
Wiktionary
விக்சனரியில் இருக்கும் கோபம் என்ற சொல்லையும் பார்க்க.


குறிப்புகள்

[தொகு]
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 168-169. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=கோபம்&oldid=21108" இலிருந்து மீள்விக்கப்பட்டது