கோபம்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

கோபம் (Anger) என்பது மனிதர்களுக்கிடையே தோன்றும் கடுமையான உணர்ச்சியாகும். இது சிறிய எரிச்சல் அளவில் இருந்து கடுமையான வெறி கொண்டதாக இருக்கலாம்.

மேற்கோள்கள்[தொகு]

 • கோபத்துக்குச் சிறந்த முறி தாமதம். -செனெகா
 • கோபப்படுவது என்பது யாருக்கும் எளிது. ஆனால் சரியான நபர் மீது சரியான அளவில் சரியான நேரத்தில் சரியான நோக்கத்துடன் கோபப்படுவது எல்லோருக்கும் வராது. - அரிசுடோடில்
 • நல்ல மனிதன் பொறுமையைக் கடைப்பிடிப்பான். - மகாவீரர்
 • உங்களில் பலசாலி யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? கோபம் வரும் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவரே பலசாலியாவார். - முகமது நபி
 • கோபம் விசம் குடிப்பதைப் போன்றது, ஆனால் நம்பிக்கை உங்கள் எதிரிகளையும் அழிக்கும் வல்லமை மிக்கது. - நெல்சன் மண்டேலா
 • கோபம் கூடாது. அது முகத்தின் அழகைக் கெடுத்து விடுகிறது. சாந்தமே முகத்திற்கு அழகு தருகிறது. - இராஜாஜி
 • அன்பில்லாத இடத்தில் தான் கோபம், முட்டாள் தனம், விரோதம் எல்லாம் இருக்கும். - இங்கர்சால்
 • இந்த உலகத்தில் அநீதி தலையெடுக்கிற போதெல்லாம் கோபமும் வெறுப்பும் கொண்டு நீ குமுறி நடுங்குவாயானால் நாம் இருவரும் தோழர்கள். அதுதான் முக்கியமான விஷயம். - சே குவேரா
 • கோபம் வரும்போது இரவும் பகலும் கடுமையாக உழைக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களிடமுள்ள அதிக அளவு சக்தியை இப்படிப் பயனுள்ள வழிகளில் செலுத்த இது ஒரு நல்ல வழி. கோபமும் குறையும். - ஹெச். ஹில்

பழமொழிகளும் சொலவடைகளும்[தொகு]

 • எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
 • ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.
 • கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
 • மிகக் கூர்மையாக இருக்க விரும்பாதீர்கள்; உங்களையே வெட்டிக்கொள்வீர்கள். - இத்தாலி பழமொழி

வெளியிணைப்புக்கள்[தொகு]

Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


Wiktionary
விக்சனரியில் இருக்கும் கோபம் என்ற சொல்லையும் பார்க்க.
"https://ta.wikiquote.org/w/index.php?title=கோபம்&oldid=15921" இருந்து மீள்விக்கப்பட்டது