எட்மண்ட் பர்க்
Appearance
எட்மண்ட் பர்க் (1729 - 1797) என்பவர் அயர்லாந்து நாட்டில் பிறந்து, பிரிட்டனில் குடியேறிய மெய்யியலாளர், இராசதந்திரி, ஆசிரியர், சொற்பொழிவாளர், அரசியல் கோட்பாட்டாளர் என பன்முகத்தன்மை வாய்ந்தவர். இலண்டனில் பாராளுமன்ற உறுப்பினராக பல ஆண்டுகள் பணியாற்றியவர். அரசியலமைப்பின் வரம்புகள், வரிவிதிப்பு, பிரெஞ்சுப் புரட்சி, அயர்லாந்து மற்றும் இந்திய சிக்கள்கள் போன்றவற்றை தனது எழுத்திலும் பேச்சிலும் பயன்படுத்தியவர். அரசியல் கோட்பாடு வரலாற்றில் முதன்மையான நபராகக் கருதப்படுகிறார்.
- நம்முடன் போராடுபவனே நமது நரம்புகளை வலுப்படுத்துகிறான், நமது திறமையைக் கூர்படுத்துகிறான். ஆக, நமது எதிரியே நமக்கு உதவுபவன்.
- புகழ்ச்சியானது புகழ்பவர் மற்றும் புகழப்படுபவர் இருவரையும் பாழ்படுத்தி விடுகின்றது.
- கரவொலி, உயர்ந்த மனதிற்கு தூண்டுகோலாகவும், பலவீன மனதிற்கு இறுதியானதாகவும் உள்ளது.
- ஒருபோதும் நம்பிக்கை இழக்காதீர்கள், அப்படியானாலும் அந்த விரக்தியிலும் செயல்பட்டுக்கொண்டே இருங்கள்.
- மாற்றம் என்னும் உயரிய சட்டத்திற்கு நாம் அனைவரும் கீழ்படியவேண்டும். இதுவே இயற்கையின் அதிக ஆற்றல்வாய்ந்த சட்டமாகும்.
- அழகு என்பது மகிழ்ச்சியின் வாக்குறுதியினைப் போன்றது.
- ஒவ்வொரு நிலத்திலும் வளரக்கூடிய களைச்செடியே அடிமைத்தனம்.
- உடலுக்கு உணவு எப்படியோ, அதுபோலவே மனதிற்கு உண்மை.
- பிரதிபலிப்பு இல்லாத படித்தல் என்பது செரிமானம் அடையாத உணவைப் போன்றது.
- நமது வலிமையை விட மிகுதியானவற்றை நமது பொறுமையின் வாயிலாக அடைய முடியும்.
- ஒழுங்கு படுத்தப்பட்ட அமைப்பு முறையே அனைத்து விஷயங்களுக்குமான அடித்தளம்.
- மனித மனதில் நாம் கண்டறியக்கூடிய முதல் மற்றும் எளிய உணர்ச்சி, ஆர்வம்.
- கடந்த காலத்தின் மூலம் உங்களால் ஒருபோதும் எதிர்காலத்தை திட்டமிட முடியாது.
- என்ன செய்யலாம் என்று வக்கீல் கூறுவது விஷயம் அன்று; என்ன செய்யவேண்டும் என்று அறிவும், அறமும், அன்பும் கூறுவதே விஷயம்.[2]
- நல்ல ஒழுங்குதான் எல்லா விஷயங்களுக்கும் அடிப்படை[3]
- நம்முடன் மல்யுத்தம் செய்பவன் நம் நரம்புகளை முறுக்கேற்றி விடுகிறான். நம் திறமைகளைக் கூர்மைப்படுத்துகிறான். நமது எதிரியே நமக்குத் துணைவன்.[4]
- எந்தக் கல்வி தேவை? ஒரு மூட்டை நூல்களை வாசித்தலா? அன்று. அடக்கம், ஒழுங்கு அறம், நீதி இவற்றின் முன்மாதிரிகளே தேவை.[5]
- ஆராய்ச்சி முறையை ஒட்டிய கல்வி முறையே இணையற்றதாகும். [5]
- தேசங்களுக்கு மலிவான பாதுகாப்பு. கல்வி.[6]
- மனிதனின் குறைபாடுகளைப்பற்றிக் கூறிக்கொண்டிருப்பவன் கடவுளையே கண்டிக்கிறான்.[7]
- தீமையான சட்டங்களே கொடுங்கோன்மையில் மிகவும் இழிவானவை.[8]
- சங்கடங்களே சான்றோரை நீட்டி அளக்கும் கோல். [9]
- சுதந்தரமும் நீதியும் எப்பொழுதெல்லாம் பிரிந்து செல்ல ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் இரண்டுக்கும் ஆபத்து என்பது என் அபிப்பிராயம்.[10]
- சிந்தியாது படிப்பது சீரணியாது உண்பதை ஒக்கும்.[11]
- மனித உள்ளத்தில் அன்புக்கு அடுத்தபடியான தெய்விக உணர்ச்சி அநுதாபமே.[12]
- அறிவிலி ஒருவன் ஒரே கதையை நாள்தோறும். ஆண்டு முழுவதும். உன்னிடம் சொல்லிவந்தால், நீ அதையும் நம்பி விடுவாய்.[13]
வெளி இணைப்புக்கள்
[தொகு]
குறிப்புகள்
[தொகு]- ↑ எட்மண்ட் பர்க்தி இந்து வணிகவீதி இணைப்பு 2016 சூலை 18
- ↑ என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 13- 21.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 142. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 134-135. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ 5.0 5.1 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கல்வி. நூல் 150-157. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 155-156. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 163. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 166. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சான்றோர். நூல் 67 - 69. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 239-241. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/படித்தல். நூல் 168-171. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 27-29. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 260-262. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.