எபிக்டெட்டஸ்
Appearance
எபிக்டெட்டஸ் (Epictetus) (கி.பி. 55-135) என்பவர் கிரேக்க உறுதிப்பாட்டுவாத மெய்யியலாளராவார்.
- யாரேனும் தவறாகப் பேசினால் கண்டிக்க வசதியுண்டேல் உடனே கண்டித்துவிடு. கண்டிக்க வசதியின்றேல் பார்வையாலும் மெளனத்தாலும் அதிருப்தியைத் தெரிவித்துவிடு.[1]
- உலக அரங்கில், 'இன்ன வேஷதாரியாகத்தான் நடிப்போம்' என்று கூற இயலாது. கொடுத்தவேலையைத் திறம்படச்செய்து முடிப்பதே நமது கடன்.[2]
- நாம் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டியவர்களல்லர். அவைகளைப் பின்பற்றிச் செல்ல வேண்டியவர்கள்.[3]
- யாரேனும் குறை கூறினால் அது உண்மையாயின் திருந்திக்கொள். பொய்யாயின் நகைத்துவிடு.[4]
- தத்துவஞானியின் முதல் கடமை தற்பெருமையைக் கைவிடல்.[5]
- சான்றோருக்குரிய ஆற்றல்கள் இரண்டு. ஒன்று. சகிப்புத் தன்மை, மற்றது. பொறுமை.[6]
குறிப்புகள்
[தொகு]- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/உரையாடல். நூல் 87- 88. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கடமை. நூல் 63- 66. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 112-114. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/குற்றம் காணல். நூல் 71- 73. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 204-205. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 291-292. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.