எபிக்டெட்டஸ்

விக்கிமேற்கோள் இலிருந்து

எபிக்டெட்டஸ் (Epictetus) (கி.பி. 55-135) என்பவர் கிரேக்க உறுதிப்பாட்டுவாத மெய்யியலாளராவார்.

உரையாடல்[தொகு]

  • யாரேனும் தவறாகப் பேசினால் கண்டிக்க வசதியுண்டேல் உடனே கண்டித்துவிடு. கண்டிக்க வசதியின்றேல் பார்வையாலும் மெளனத்தாலும் அதிருப்தியைத் தெரிவித்துவிடு.[1]

கடமை[தொகு]

  • உலக அரங்கில், 'இன்ன வேஷதாரியாகத்தான் நடிப்போம்' என்று கூற இயலாது. கொடுத்தவேலையைத் திறம்படச்செய்து முடிப்பதே நமது கடன்.[2]

கடவுள்[தொகு]

  • நாம் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டியவர்களல்லர். அவைகளைப் பின்பற்றிச் செல்ல வேண்டியவர்கள்.[3]

குற்றம் காணல்[தொகு]

  • யாரேனும் குறை கூறினால் அது உண்மையாயின் திருந்திக்கொள். பொய்யாயின் நகைத்துவிடு.[4]

தத்துவ ஞானம்[தொகு]

  • தத்துவஞானியின் முதல் கடமை தற்பெருமையைக் கைவிடல்.[5]

பொறுமை[தொகு]

  • சான்றோருக்குரிய ஆற்றல்கள் இரண்டு. ஒன்று. சகிப்புத் தன்மை, மற்றது. பொறுமை.[6]

குறிப்புகள்[தொகு]

  1. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/உரையாடல். நூல் 87- 88. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கடமை. நூல் 63- 66. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 112-114. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  4. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/குற்றம் காணல். நூல் 71- 73. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  5. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 204-205. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  6. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 291-292. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=எபிக்டெட்டஸ்&oldid=35382" இலிருந்து மீள்விக்கப்பட்டது