உரையாடல்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
August Hermann Knoop Rokoko-Kavaliere.jpg

உரையாடல் (conversation) என்பது ஒருவர் மற்றவருடன் கலந்து பேசிக் (உரை) கொள்வதைக் குறிக்கும். உரையாடலின் போது ஒருவருக்கொருவர் அளவளாவி, பேசி, கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். எழுத்து வழியாக செய்திப் பரிமாற்றம் நடந்தால், அதுவும் உரையாடல் என்றே வழங்கும். உரையாடல் என்பது குமுகாயத்தில் ஒரு இன்றியமையாத திறனாகக் கருதப் படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

 • மனித வாழ்வில் கிடைக்கக்கூடிய மகத்தான இன்பங்களில் நல்ல சம்பாஷணையும் ஒன்று. இன்பகரமாய்க் கழிந்த மாலைநேரத்தை வர்ணிக்கப் புகுந்த ஜாண்ஸன் இன்று நன்கு சம்பாஷித்தோம்” என்று கூறி முடித்தார். -ஆவ்பரி[1]
 • பிறரைப் பேசவிடாமல் பேசிக்கொண்டிருப்பவர் தம் குரல் தொனியைக் கேட்க விரும்புபவர், தம் குரல் தொனி இப்படியிருக்கும் என்று அறியாதவர் என இருவகையர். -செஸ்டர்ட்டன்[1]
 • சுமுகமாயிருத்தல் என்பது விலையின்றிக் கிடைக்கும். ஆனால் அதைக்கொண்டு அனைத்தையும் வாங்க முடியும். - பிராங்க்ளின்[1]
 • அறிவைவிட அந்தரங்க விசுவாசமே சம்பாஷணையை அதிகச் சோபிதமாக்கும். -ரோஷிவக்கல்டு[1]
 • யாரேனும் தவறாகப் பேசினால் கண்டிக்க வசதியுண்டேல் உடனே கண்டித்துவிடு. கண்டிக்க வசதியின்றேல் பார்வையாலும் மெளனத்தாலும் அதிருப்தியைத் தெரிவித்துவிடு. - எபிக்டெட்டஸ்[1]
 • பிறர் மனம் புண்ணாகாமல் பேசுவது அவசியமாவது போலவே பிறர் பேச இடங்கொடுத்து மரியாதையாகச் செவிசாய்ப்பதும் அவசியமாகும்.- ஹெச்.ஏ.[1]
 • சாமர்த்தியத்தை விடத் தன்னம்பிக்கையே சம்பாஷணையில் ஜெயம் தரும். -ரோஷிவக்கல்டு[1]
 • எவர் பேசுவதையும் கேட்டுக்கொள்; ஆனால் சிலரிடமே பேச்சுக்கொடு. எவர் கஷ்டத்தையும் தெரிந்து கொள்; ஆனால் உன் கருத்தைக் கூறிவிடாதே.-ஷேக்ஸ்பியர்[1]
 • * ஒரு முறை நான் சென்னை பச்சையப்பன் கல்லூரி ஆண்டு இறுதி விழாவில் உரையாற்றினேன். இந்தச் செய்தியைத் தினமணி பேப்பரில், “ம. பொ. சி. இறுதி உரையாற்றினர்“ என்று போட்டிருந்தார்கள். இது நடந்து 25 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. ஆனால் நான் இன்னும் உரையாற்றிக் கொண்டுதான் இருக்கிறேன்.- ம. பொ. சிவஞானம்[2]

குறிப்புகள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/உரையாடல். நூல் 87- 88. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
 2. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 31-40. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=உரையாடல்&oldid=17926" இருந்து மீள்விக்கப்பட்டது