செய்ந்நன்றி

விக்கிமேற்கோள் இலிருந்து

செய்ந்நன்றி (Gratitude) எனப்படுவது ஒருவர் தனக்கு செய்த உதவியை மறவாமல் இருக்கும் ஒரு சிறந்த பண்பாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  • கடவுள் இன்று உங்களுக்கு 86,400 விநாடிகளைப் பரிசாக வழங்கியுள்ளார். இதில் ஒரு விநாடியை நன்றி சொல்ல பயன்படுத்தினீர்களா? - வில்லியம் ஆர்தர் வார்டு
  • ஆண்டவனுக்கு இரண்டு உறைவிடங்கள் உண்டு. ஒன்று சொர்க்கம்; மற்றொன்று நன்றியுள்ள மனிதனின் இதயம். - ஐசக் வால்டன்
  • நன்மை செய்தவர்க்கு நன்மை செய்யாதிருப்பது மனித குணத்திற்கு விரோதம். நன்மை செய்தவர்க்குத் தீமை செய்வது பேய்க் குணமாகும். -ஸெனீக்கா[1]
  • நன்றி செய்தாயா-அதைப்பற்றிப் பேசற்க. நன்றி பெற்றாயா- அதைப்பற்றிப் பேசுக. -ஸெனீக்கா[1]
  • நான் நன்றியோடு இருக்க வேண்டும் என்று உறுதியாக எண்ணினால், அவ்வாறே இருப்பேன் -ஸெனீகா[2]
  • செய்நன்றி செலுத்த அதிகமாய் ஆத்திரப்படுவதும் செய்நன்றியைக் கொலை செய்வதில் ஒருவகையாகும். -ரோஷிவக்கல்டு[1]
  • பெற்ற நன்றியை மறப்பவனும், பிறரிடம் மறைப்பவனும், கைம்மாறு செய்யாதவனும் செய்நன்றி கொல்லும் பாதகர்கள் இவர்களில் பெரிய பாதகன் நன்றியை மறப்பவன். - ஸிஸரோ[1]
  • நன்றியறியாமையில் சகல இழிதகைமைகளும் அடங்கும். இதர துர்க் குணங்களோடன்றி அது ஒரு பொழுதும் தனியாகக் காணப்படுவதுமில்லை. - புல்லர்[1]
  • நன்றியறியாமை ஒருவித பலவீனமே. பல முடையவர் நன்றியறியாதிருக்க நான் பார்த்ததில்லை. - கதே[1]
  • நன்றியறிதலைப் போன்ற இன்பகரமான மனோதர்மம் வேறொன்றுமில்லை. இதர அறங்களை அனுஷ்டிப்பதில் கஷ்டம் உண்டு. இதிலோ அணுவளவு கஷ்டமும் கிடையாது. -அடிஸன்[1]
  • நண்பர்களின் உதவியை நாம் மிகைப்படுத்திக் கூறுவதற்குக் காரணம் நம்முடைய நன்றியறிவுடைமையன்று. நம்முடைய தகுதியைப் பிறர்க்கு அறிவிக்க வேண்டுமென்ற ஆசையேயாகும். -ரோஷிவக்கல்டு[1]
  • சரியாய் மெச்சக் கற்றுக்கொள். வாழ்வின் பேரின்பம் அதுவே. பெரியோர் மெச்சுபவைகளைக்கவனி; அவர்கள் பெரிய விஷயங்களையே மெச்சுவர் தாழ்ந்தோரே இழிவான விஷயங்களை மெச்சவும் வணங்கவும் செய்வர். -தாக்கரே[1]
  • வீசு, குளிர்காற்றே! வீசு. மனிதனுடைய நன்றியறியாமைப் போல நீ அவ்வளவு அன்பற்றவன் அல்ல; உன் மூச்சு சீறினாலும் உன் பற்கள் கூரியதாயில்லை. -ஷேக்ஸ்பியர்[1]
  • ஆண்ட்வனே எனக்கு உயிர் அளித்ததுபோல், நன்றி நிறைந்த இதயத்தையும் அளிப்பாயாக. -ஷேக்ஸ்பியர்[2]
  • நன்றியறிதல் என்பது அதிக கவனமாய் உண்டாக்க வேண்டிய பயிராகும். அதைக் கீழோரிடைக் காண முடியாது. -ஜான்சன்[1]
  • என்னுடைய அகவாழ்வும், புறவாழ்வும் என்னுடைய இனத்தாரின் இறந்தவரும், இருப்பவரும் உழைப்பினலேயே ஆக்கப்பட்டிருக்கின்றன என்பதை நான் நாள்தோறும் உணர்கிறேன். பிறர் உழைப்பால் நான் எவ்வளவு நன்மையைப் பெற்றாேனோ, அத்துணை நன்மையை நான் பிறருக்குச் செய்ய எவ்வளவு உழைக்க வேண்டும். - ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்[3]
  • நன்றி என்பது கடவுள் அருளிய நன்மையின் நினைவு மட்டும் அன்று இதயம்கலந்த வணக்கமும் ஆகும். - என். பி. வில்லிஸ்[2]
  • உன்னதமான இதயங்களில் நன்றியறிதல் ஒரு பெரிய உண்ர்ச்சியின் ஆர்வத்தைக் கொண்டிருக்கும். - பாயின்ஸலாட்[2]
  • புரம்பொருளைப்பற்றிய நன்றியுள்ள கருத்து, தானே.ஒரு பிரார்த்தனையாகும். -லெஸ்னிஸின்[2]
  • நன்றியறிதலை மிகச்சிறந்த பண்பாகப் போற்றுகிறார்கள். ஆனால், செயலில் அதை விட்டுவிடுகிறார்கள். பேச்சுக்கு அது அணி, உண்மை வாழ்க்கைக்கு அது அவதூறாகத் தோன்றுகிறது - ஃபோர்னே[2]

பழமொழிகள்[தொகு]

  • உப்பிட்டவரை உள்ளளவும் நினை. - தமிழ் பழமொழி
  • நன்றியுள்ள மனிதன் எது சொன்னாலும் நம்பலாம். அவன் துரோகம் செய்யமாட்டான். - ஸ்பெயின் பழமொழி
  • நன்றியறிதல் அறங்களில் குறைந்தது. நன்றியறியாமை மறங்களில் கொடியது.[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நன்றியறிதல். நூல் 82- 84. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 232. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 31-40. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.

வெளியிணைப்புக்கள்[தொகு]

Wiktionary
Wiktionary
விக்சனரியில் இருக்கும் செய்ந்நன்றி என்ற சொல்லையும் பார்க்க.
"https://ta.wikiquote.org/w/index.php?title=செய்ந்நன்றி&oldid=21811" இலிருந்து மீள்விக்கப்பட்டது