இரத்தல்
Appearance
இரத்தல் (Begging) என்பது ஒரு மனிதர் பிறரிடம் தனது பிழைப்பிற்கு தேவையான பணமோ அல்லது பிற பொருளோ கேட்டல் ஆகும். இவ்வாறு கேட்டு பெறும் பணமோ அல்லது ஏதேனும் பொருளோ திருப்பி கொடுக்க வேண்டியதில்லை.
மேற்கோள்கள்
[தொகு]- இரப்போரைக் குதிரைமேல் ஏற்றி வைத்தால் குதிரை இறக்கும்வரை சவாரி செய்து கொண்டிருப்பர். ஷேக்ஸ்பியர்[1]
- உண்மையான இரவலனே உண்மையான அரசனாவான். லெஸ்லிங்[1]
- இரவலனாய் வாழ்பவன் இறைவனாயிருக்க விரும்புகின்றான். இறைவனாய் வாழ்ந்தவன் இரவலனாய் வாழவில்லை என்று வருந்துகின்றான். ஹால்[1]
- இரவலரை இல்லாமல் செய்யவேண்டும், அவர்க்குக் கொடுப்பதும் வேதனை தருகிறது, கொடுக்காமலிருப்பதும் வேதனை தருகிறது. நீட்சே[1]
- இரப்போருக்கு ஈபவர் இரப்போர் ஆக்குபவர். ஹேவோர்ட்[1]
குறிப்புகள்
[தொகு]