இரத்தல்

விக்கிமேற்கோள் இல் இருந்து
இரத்தல்

இரத்தல் (Begging) என்பது ஒரு மனிதர் பிறரிடம் தனது பிழைப்பிற்கு தேவையான பணமோ அல்லது பிற பொருளோ கேட்டல் ஆகும். இவ்வாறு கேட்டு பெறும் பணமோ அல்லது ஏதேனும் பொருளோ திருப்பி கொடுக்க வேண்டியதில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  • இரப்போரைக் குதிரைமேல் ஏற்றி வைத்தால் குதிரை இறக்கும்வரை சவாரி செய்து கொண்டிருப்பர். ஷேக்ஸ்பியர்[1]
  • உண்மையான இரவலனே உண்மையான அரசனாவான். லெஸ்லிங்[1]
  • இரவலனாய் வாழ்பவன் இறைவனாயிருக்க விரும்புகின்றான். இறைவனாய் வாழ்ந்தவன் இரவலனாய் வாழவில்லை என்று வருந்துகின்றான். ஹால்[1]
  • இரவலரை இல்லாமல் செய்யவேண்டும், அவர்க்குக் கொடுப்பதும் வேதனை தருகிறது, கொடுக்காமலிருப்பதும் வேதனை தருகிறது. நீட்சே[1]
  • இரப்போருக்கு ஈபவர் இரப்போர் ஆக்குபவர். ஹேவோர்ட்[1]

குறிப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. 1.0 1.1 1.2 1.3 1.4 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/இரத்தல். நூல் 148-149. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=இரத்தல்&oldid=18997" இருந்து மீள்விக்கப்பட்டது