தியாகம்
Appearance
தியாகம் அல்லது ஈகம் என்பது பிறருக்காக தன் நலன்களை விட்டுக் கொடுத்தல் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- மனிதன் இறப்பதற்குத் தகுந்த இடம் மனிதனுக்காக இறக்கு மிடமே. -எம். ஜே. பாரி[1]
- முள் தைக்கா வண்ணம் ரோஜா பறிப்பது எப்படி? -பில்பே[1]
- நல்ல காரியங்களுக்காகக் கஷ்டப்பட வேண்டியிருக்கும் பொழுதுதான் அவை அதிகப் பிரியமானவை ஆகின்றன. -வாவனார்கூஸ்[1]
- நெருப்பு வழிச் செல்பவன் புகைக்கு அஞ்ச மாட்டான். -டெனிஸன்[1]
- திராட்சைக் கொடி கனி தருவதாக எண்ணாமல் கனி தந்துகொண்டிருப்பதுபோல், தியாகம் செய்வதாக எண்ணாமல் தியாகம் செய்வதே மனிதனுடைய உண்மையான இயல்பாகும். -மார்க்க ஒளரேலியன்[1]
- தன்னைப் பிறர்க்காகத் தியாகம் செய்தல் சகல சமயங்களுக்கும் அழியாத அஸ்திவாரம்- அது ஒன்றே சாஸ்வதமான உண்மையறம். -மாஜினி[1]
- இலட்சியம் சீக்கிரமாகப் பழுத்துப் பயன் தருவது, தியாகம் செய்வோருடைய இரத்தம் பாய்ந்து போஷிக்கப்படும் பொழுதுதான். -மாஜினி[1]
- உங்களில் தலைவனாக இருக்க விரும்புபவன் உங்களுக்கு ஊழியனாக இருக்கக் கடவன். -கிறிஸ்து[1]
- தன்னை ஒடுக்கும் தியாகம்- இதுவே இறைவன் மனிதனுக்கு அருளியுள்ள தலை சிறந்த ஞானமாகும். -கார்லைல்[1]
- பெரிய விஷயங்களில் தியாகம் செய்தல் எளிது, சிறிய விஷயங்களில் தியாகம் செய்வதே கடினமாகும். -கதே[1]
- எவ்வித தியாகமுமின்றி எவ்வித நன்மையும் பெற முடியாது. -ஹெல்ப்ஸ்[1]
- என்னைப் பொறுத்த வரையில், என்னிடமிருந்த அளவு, என்னால் முடிந்த வரையில், சுதந்திரப் போராட்டத்தில் தியாகம் செய்தேன். என் தியாகம் பெரிதாக இல்லாமல் இருக்கலாம். என்னிடம் இருந்ததும், என்னல் முடிந்ததும் அவ்வளவுதான். அதைச் செய்துவிட்டேன்.- இராஜாஜி[2]