டாஸிடஸ்
Appearance
பப்லியஸ் (அல்லது கயஸ்) கொர்னேலியஸ் டாசிட்டஸ் (Publius (or Gaius) Cornelius Tacitus, c. AD 56 - c. 120) என்பவர் ஒரு ரோமானிய வரலாற்றாசிரியரும் அரசியல்வாதியும் ஆவார். டசிட்டஸ் மிகச் சிறந்த ரோமானிய வரலாற்றாசிரியர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- அசட்டையாக விடப்பெற்ற அவதூறு தானே மறைந்துவிடும்: உனக்கு அதனால் வருத்தம் ஏற்பட்டதாக காட்டிக் கொண்டால், அது உண்மையாயிருக்கும் என்று நம்பும்படி செய்துவிடும்.[1]
- அக்கிரமத்தின் மூலம் பெற்ற அதிகாரம். எந்த நன்மையான காரியத்திற்கோ. பயனுள்ள வேலைக்கோ உபயோகிக்கப்படுவதில்லை.[2]
- கொடுமையை எதிர்க்கும் ஆசை மனிதனுடைய இயல்பில் அமைந்துள்ளது.[3]
- அரசாங்கம் மிகவும் ஊழலாய்ப் போயிருந்தால், அப்போது சட்டங்கள் அளவுக்கதிகமாகும்.[4]
- செழுமை நற்பண்பின் உரைகல். ஏனெனில், இன்பத்தால் நலிவடையாமல் இருப்பதைவிடத் துன்பங்களைத் தாங்குதல் அதிகக் கஷ்டம்.[5]
- ஆட்சி புரியும் ஒருவன், தனக்கு அடுத்தாற்போல் பட்டத்திற்குரியவனிடத்தில் எப்பொழுதும் சந்தேகமும், துவேஷமும் கொண்டிருப்பான்.[6]
- விசேஷ அறிவாற்றல்களால் அவன் வெற்றியடையவில்லை. ஆனால், வியாபாரத்திற்கு வேண்டிய அளவு - அதற்கு மேற் போகாத அளவு - திறமை அவனிடம் இருந்தது.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 52-56. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 93-95. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 167. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 171-173. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 198. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 290-291. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 311. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.