உள்ளடக்கத்துக்குச் செல்

இன்சொல்

விக்கிமேற்கோள் இலிருந்து

இன்சொல் அல்லது இனிய சொல் என்பது மகிழ்ச்சியளிக்கும் நல்ற்சொல்லாகும்

மேற்கோள்கள்

[தொகு]
  • இன்சொல் வழங்குவதால் நாக்கு காயமுறுவதில்லை. -ஹேவுட்[1]
  • இன்சொற்களின் விலை அற்பம், ஆனால் அதன் மதிப்போ அதிகம். -ஹெர்பர்ட்[1]
  • பானை கீறலா அன்றா? ஒலியால் அறியலாம். அறிவாளியா, அறிவிலியா? பேச்சால் அறியலாம், -டெமாஸ்தனீஸ்[1]
  • ரூபன்ஸ் என்னும் ஓவியன் ஒரு கோடு கிழித்தால் போதும், அழும்முகம் நகைமுகம் ஆகிவிடும். அதுபோல் நாமும் செய்ய முடியும், நமக்கு ஒரு மொழி போதும். -ஆவ்பரி[1]
  • ஜனங்கள் இறந்தோரைப் பேசுவது போலவே இருப்போரையும் பேசுவார்களானால் எவ்வளவு நன்மையாய் இருக்கும்? -ஆவ்பரி[1]
  • மொழிகள் மண்ணுலகின் புத்திரிகள்; செயல்கள் விண்ணுலகின் புத்திரர்கள். -ஜாண்சன்[1]
  • எண்ணங்களுக்கு மொழிகள் எப்படியோ அப்படியே நற்குணத்துக்கு உபசாரம். - ஜூபர்ட்[1]
  • இருட்டறையில் மின்மினி வந்தால் எப்படி அறையில் இருளை மறந்து பூச்சியின் அழகைப் பருகுகிறோமோ, அப்படியே நமக்குத் துன்பம் வந்த சமயம் யாரேனும் இனிய மொழி பகர்ந்தால் நம் துன்பங்களை மறந்து அந்த மொழியின் இனிமையை உணர்கின்றோம். -ஆர்தர் ஹெல்ப்ஸ்[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/இனிய சொல். நூல் 84- 85. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=இன்சொல்&oldid=16299" இலிருந்து மீள்விக்கப்பட்டது