உள்ளடக்கத்துக்குச் செல்

இன்னல்

விக்கிமேற்கோள் இலிருந்து

இன்னல் அல்லது துன்பம் (Difficulties) குறித்த மேற்கோள்கள்

  • தத்துவத்திற்காக நடக்கும் பரீட்சையே இன்னல், அது இல்லாவிட்டால், ஒரு மனிதன் தான் நேர்மையாளனா அல்லனா என்பதைத் தெரிந்து கொள்ள இயலாமற்போகும். -பீல்டிங் [1]
  • துன்பமே உண்மைக்கு முதல் வழி. -பைரன்[1]
  • வறுமை. உள்ளே அடங்கிக் கிடக்கும் அறிவாற்றல்களை வெளிவரச்செய்கின்றது. செழிப்பான நிலைமைகளில் அவை அடங்கியே கிடக்கும். -ஹொரேன்[1]
  • செழிப்பு ஓர் ஆசிரியர் வறுமை அதைவிடச் சிறந்த ஆசிரியர் செல்வம் மனத்திற்கு வேண்டியதையெல்லாம் அள்ளிக் கொடுக்கும். கஷ்டம் மனத்திற்குப் பயிற்சி அளித்து வலிமைப்படுத்தும். - ஹாஸ்லிட்[1]
  • கோதுமையைத் தீட்டும் போது அதை உமியிலிருந்து பிரிப்பது: போல. இன்னல் நல்லொழுக்கத்தைச் சுத்தமாக்கி எடுக்கின்றது. - பர்டன்[1]
  • வாழ்க்கையின் வெயிலில் கொஞ்சம் காய்ந்தும். மழையில் கொஞ்சம் நனைந்தும் வந்ததால், எனக்கு நன்மையே ஏற்பட்டிருக்கின்றது. - லாங்ஃபெல்லோ[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 115. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=இன்னல்&oldid=20326" இலிருந்து மீள்விக்கப்பட்டது