கண்ணீர்
Appearance
கண்ணீர் என்பது கண்களில் இருக்கும் கண்ணீர்ச் சுரப்பிகளிலிருந்து கண்களை உயவூட்டவும், சுத்தம் செய்யவும், கண்ணீர் அழற்சியின் பொழுதும் கண்ணீர்க்குழாய்கள் வழியாக சுரக்கும் ஒரு உடல் திரவம்.
மேற்கோள்கள்
[தொகு]- இதயத்தின்மீது அளவுக்கதிகமான பாரம் ஏறும் பொழுது, திறந்துவரும் குழாயடைப்புகளே கண்ணீர்த் துளிகள். - ஆல்பெர்ட் ஸ்மித்[1]
- அன்பு. கண்ணீருடன் கலந்து வரும் பொழுது. அது பெரும் பேறாகும். - வால்டர் ஸ்காட்[1]
- ஒரு சொட்டுக் கண்ணீருடன் விளங்கும் புன்னகை, நிகரற்ற ஒளியும் அழகும் உடையதாகும். - லாண்டர்[1]
- கண்ணீரில்லாத துக்கம். உள்ளே உதிரம் வடிக்கும். - போவீ[1]
- அழுதறியாத இளைஞன் ஒரு காட்டுமிராண்டி; சிரித்தறியாத கிழவன் ஒரு மூடன். - ஜியார்ஜ் ஸாந்தாயன[1]