கொள்கை வெறி
Appearance
கொள்கை வெறி (fanaticism) எனப்படுவது ஒருவர்க்கு பிடித்தமான ஒன்றின் மீதான அதீத பற்று ஆகும். இதைப் பற்றி தத்துவ மேதை ஜார்ஜ் சண்டயானா, மறந்துபோன கொள்கையினை இரண்டு மடங்கு வேகத்தில் அடைய கொள்கை வெறி வித்திடும் என்று கூறுகிறார்.[1] இதைப் பற்றி வின்ஸ்டன் சர்ச்சில் கொள்கை வெறியுடையோன் தன் மனதையோ, தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ள மாட்டான் எனக் கூறியுள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- கொள்கையில் பரிபூரணமான நம்பிக்கை வேண்டியது தான். ஆனால் அது குருட்டுத்தனமானதாய் இருந்து விடக்கூடாது. -ஆவ்பரி[2]
- ஒருவன் அநேக விஷயங்களில் வைதீகமாயிருக்க வேண்டும். இல்லையெனில் அவனுக்குத் தன் சொந்த அவைதீகக் கொள்கையைப் போதிக்க ஒருபொழுதும் நேரமிராது. -செஸ்டர்டன்[2]
- நாம் அரைகுறையாக அறிவதையே அதிக உறுதியாக நம்பிவிடுகிறோம். -மான்டெய்ன்[2]
- உண்மையைக் காண அறிவை அழக்கச் சொல்லுதல் பகலொளியைக் காணக் கண்களை அவித்துக் கொள்ளச் சொல்லுதல் போலாம். அறிவை அழிக்கச் சொல்வது சமயத்தின் சூழ்ச்சி அன்று, மூட நம்பிக்கையினதே. - தாமஸ் வில்ஸன்[2]
- சமயவெறி கொண்டார். கொள்கை முறைகள் குறித்துச் சண்டையிடட்டும். வாழ்வைச் சரியாக நடத்தினால் கொள்கை தவறாய்விட முடியாது. -போப்[2]
- கொள்கையைக் கூறுவதில் காணப்படும் நம்பிக்கையைவிட அதிகமான நம்பிக்கை, கொள்கையைக் குறித்து சந்தேகம் கூறுவதில் காணப்படும். -டெனிஸன்[2]
- பிடிவாதமான மூட நம்பிக்கை தனக்குப் பிரியமான ஒரு பொய்யை மணந்துகொண்டால் அதை விட்டுப் பிரியாமல் இறுதிவரை அணைத்துக்கொள்ளும். -மூர்[2]
- கொள்கை வெறிக்குத் தலையே கிடையாது. அதனால் சிந்திக்க இயலாது. இதயம் கிடையாது. இதனால் உணரவும் முடியாது. அது அசைந்தால் கோபத்தோடு செல்லும். அது ஓரிடத்தில் தங்கினால் சுற்றிலும் எல்லாம் பாழாயிருக்கும். அதன் பிரார்த்தனைகள் சாபக்கேடுகளாக இருக்கும். அதன் தெய்வம், ஒரு பேய். அதன் துணை. மரணம் - ஓ' கானல்[3]
- ஒரு மனிதன் ஒழுக்கமும் உண்மையும் தன் பக்கத்தில் மட்டுமே இருப்பதாக நம்புவது அறிவீனமும், நேர்மையின்மையும் ஆகும். - அடிஸன்[3]
குறிப்புகள்
[தொகு]
- ↑ Santayana, George (1905). Life of Reason: Reason in Common Sense. (New York: Charles Scribner's Sons) 13.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கொள்கை நம்பிக்கை. நூல் 78- 80. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ 3.0 3.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 168. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.