உள்ளடக்கத்துக்குச் செல்

பழி

விக்கிமேற்கோள் இலிருந்து

பழி என்பது ஒரு நபரை அல்லது ஒரு குழுவை ஒரு தவறுக்கு பொறுப்பாக்கிக் கூறுவது ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

 • 'இகழ்தல்' -அதனோடு விளையாடினால் ஆபத்து; அதனோடு வாழ்ந்தாலோ அழிவேதான். -கார்லைல்[1]
 • நிந்தைமொழிகள் நெருப்புப் பொறிகளை ஒக்கும்; ஊதிவிடாவிட்டால் தாமாக அவிந்து போகும். -போயர்ஹீன்[1]
 • எந்த ஆழ்ந்த புண்ணேனும், வடுவின்றி ஆறியதுண்டோ? -பைரன்[1]
 • தற்புகழ்ச்சி முடைநாறும் என்பர்; அப்படியானால் அவர்க்கு அனியாயமாய்க் கூறும் அவதூற்றின் நாற்றம் தெரியாது போலும்! - கதே[1]
 • 'அவதூறு' சொல்லும் வண்டிக்கு மைபோட ஆள்பஞ்சம் உண்டாவதில்லை. -ஊய்டா[1]
 • தன்னைப் பற்றிப் புறங்கூறுவது ஒவ்வொருவனுக்கும் தெரியுமானால், அதன்பின் உலகில் நான்கு நண்பர்களைக் கூடக் காண முடியாது. - பாஸ்கல்[1]
 • தெய்வமே பெண்ணாக வந்தாலும் அவதூறு என்னும் நாய் அவளைப் பார்த்துக் குரையாமல் இராது. -ஹோம்[1]
 • அடுத்த வீட்டுக் காரனுடைய குறைகளை அம்பலப்படுத்த ஆசையாயுள்ள தினவுக்கு மருந்துமில்லை, மந்திரமுமில்லை.-ஹார்வி[1]
 • அவதூறு வாளினும் அதிகமான கூர்மையும், நாகத்தினும் அதிகமான விஷமும் உடையது. அது மூச்சு விட்டால் போதும், அரைக்கணத்தில் அகிலலோகமும் பரவிடும். -ஷேக்ஸ்பியர்[1]
 • ஒரு மணி நேரம்கூட நாம் ஒருவர்க்கொருவர் அன்பாயிருக்க முடியவில்லை. சகோதரன் தவறு கண்டால் அதைப் பிறரிடம் ஊதுகிறோம், சாடை காட்டுகிறோம், நகைக்கிறோம், இளிக்கிறோம்-எவ்வளவுதான் நாம் நம் பெருமையைத் தூக்கி நிறுத்தினாலும் நாம் மனிதர்கள் ஒரு அற்பமான ஜாதியே. -டெனிஸன்[1]

பழமொழிகள்[தொகு]

 • உலகத்தில் ஒருபாதிக்கு அவதூறு சொல்லுவதில் ஆனந்தம் மற்றப் பாதிக்கு அதை நம்புவதில் ஆனந்தம். -பழமொழி[1]

குறிப்புகள்[தொகு]

 1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/பழி. நூல் 95- 96. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பழி&oldid=21509" இலிருந்து மீள்விக்கப்பட்டது