மருந்து
Appearance
மருந்து (Pharmaceutical drug) என்பது ஒரு நோயைக் கண்டறிய, குணப்படுத்த, சிகிச்சை செய்ய அல்லது நோய் வராமல் தடுக்க பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுடன் கைகளைக் குலுக்குங்கள், கட்டி அணையுங்கள். இவைதான் அவர்களுக்குச் சிறந்த மருந்து. - இளவரசி டயானா[1]
- நான் நீண்ட காலம் எந்தவகை மருந்தும் சாப்பிட்டதில்லை. மருந்து சாப்பிட வேண்டாம் என்று மற்றவர்களுக்கு புத்திமதி சொல்லியிருக்கிறேன். அதிர்ஷ்டவசமாக எனக்கு நோய் ஏற்பட்டதில்லை. —நேரு (14-10-1962)[2]
- மருந்துகளுள் முதன்னையானவை ஓய்வும். உபவாசமும். - ஃபிராங்க்லின்[3]
- உணவு முதலியவற்றில் நிதானமும், உடற்பயிற்சியும் இல்லாததற்குப் பதிலாகத்தான் மருந்துகளை உபயோகிக்கிறோம். - அடிஸன்[3]
- தீப்ஸ் நகரில் ஒரு நூல் நிலையத்தின் நிலையில் இப்படி எழுதப்பட்டிருக்கின்றது: 'ஆன்மாவுக்கு மருந்து'. - டயோடோரஸ் சிகியூலஸ்[3]
- மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். -திருவள்ளுவர்
சான்றுகள்
[தொகு]- ↑ தி இந்து பெண் இன்று இணைப்பு 2016, திசம்பர் 4
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 91-100. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ 3.0 3.1 3.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 298. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.