அடக்கம்
Appearance
அடக்கம் அல்லது பணிவு (modesty) என்பது பலராலும் சிறப்பாக கூறப்பட்ட ஒரு சிறந்த பண்பாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- கல்வி ஒரு மூட்டை நூல்களை வாசிப்பது அன்று; அடக்கம், ஒழுங்கு, அறம், நீதி இவற்றின் முன்மாதிரியாகும்! - எட்மண்ட்பர்க்
- எவ்வளவு கல்வியும் செல்வமும் இருந்தாலும், அடக்கம் இல்லாவிடில் பண்பாடென்பது இல்லை. - இராஜாஜி
- கதிர் நிறைந்தால் பயிர் தரையில் தொங்கும். -பிஷப் ரெய்னால்ட்ஸ்[1]
- இறைவனே! என்னிடம் தாழ்மையை வேண்டுகிறீர். ஆனால் நான் இன்னும் அந்த உயர்ந்த பொருளை எட்டவில்லை. -டால்ஸ்டாய்[1]
- எல்லோர்க்கும் பிறர்க்கு எஜமானாயிருக்க ஆசை. ஆனால் எவனும் தனக்கு எஜமானனாயில்லை. -கதே[1]
- எஜமானனா? சில வேளைகளில் குருடாயிருக்கவேண்டும். ஊழியனா? சில வேளைகளில் செவிடாயிருக்கவேண்டும்.- புல்லர்[1]
- மனித ஜாதியின் திறமைக்குள் அடங்கும் நன்மைகள் எல்லாம், 'கீழ்ப்படிதல்' என்பதில் அடங்கும். -மில்[1]
- நெஞ்சில் போர் நிகழ்த்தும்பொழுதுதான் நாம் கொஞ்சமேனும் பெறுமதி அடைகின்றோம். - ராபர்ட் ப்ரெளணிங்[1]
- தன்னைத்தானே உயர்த்திக்கொள்பவன் தாழ்த்தப்படுவான். தன்னைத்தானே தாழ்த்திக்கொள்பவன் உயர்த்தப்படுவான். -விவிலியம்[1]
- வாஞ்சையும் தாழ்மையும் துன்பங்களைச் சகித்துக் கொள்வதன் மூலமே கற்றுக்கொள்ள முடியும். -ஜார்ஜ் எலியட்[1]
- தாழ்மையே அறிவுடைமையின் உத்தம அடையாளம். -ஜெரிமி காலியர்[1]
- அடக்கமுள்ள பிள்ளைகளைத் தந்தைமார் அழைத்தால் உடனே அவரைச் சார்ந்து, ’ஏன் அழைத்தீர்கள்’ என்று கேட்பது உயர்ந்தது என்று சிலர் கருதுகின்றனர். என் கருத்து சென்று நிற்றல் வேண்டும் என்பதே. —ஞானியாரடிகள்[2]
- அடக்கம் என்ற பொன்னில் பதித்த அறிவு இருமடங்கு ஒளியுடன் பிரகாசிக்கும். திறமையோடு அடக்கத்தையும் பெற்றுள்ள மனிதன் ஓர் இராஜ்யத்திற்கு ஈடாகவுள்ள மணியாகும். - பென்[3]
- பிறரை இழிவாகப் பார்த்தல் எளிது. நம்மையே இழிவாகப் பார்த்துக்கொள்வதுதான் கஷ்டம். -பீட்டர்பரோ[3]
- செருக்கு. தேவர்களை அசுரர்களாக மாற்றுவது: .அ.க்கம் மனிதர்களைத் தேவர்களாக்குவது. -அகஸ்டின்[3]
- அறிவாளியாயிரு உயரத்தில் பறந்து கீழே விழாதே. உயர்வதற்காகத் தாழ்மையுடன் இரு. - மாஸ்ஸினசர்
- தாழ்ந்து கிடக்கும் அடக்கம் என்ற தேரிலிருந்துதான் தெய்விகக் குணங்கள் கிளைத்து வளர்கின்றன. - மூர்[3]
- சுவர்க்கத்தின் வாயில்கள். அரசர்களுடைய அரண்மனை வாயில்களைப் போல உயரமாக அமைந்திருக்கவில்லை: அங்கே நுழைபவர்கள் முழங்கால் பணிந்து ஊர்ந்து செல்ல வேண்டும். - ஜே. வெப்ஸ்டர்[3]
- அடக்கம் என்பது தன்னைத்தானே சரியாக மதிப்பிட்டுக் கொள்ளலாகும். - ஸ்பாஜியன்[3]
- எல்லோரும் பணிவைப்பற்றி உபதேசம் செய்கின்றனர். எவரும் அதன்படி நடப்பதில்லை. ஆனால், செவியால் மட்டும் கேட்டுத் திருப்தியடைகின்றனர். எசமானன் அது தன் வேலைக்காரனுக்கு ஏற்றது என்று எண்றுகிறான். ஜனங்கள் அது பாதிரிமார்களுக்கு ஏற்றது என்று எண்ணுகின்றனர். பாதிரிமார்கள் அது ஜனங்களுக்கு ஏற்றது என்று எண்ணு கின்றனர். - ஸெல்டென்[3]
- இறைவனை அடைய ஒரே பாதைதான் உண்டு. அதுதான் பணிவு. மற்ற பாதைகள் வேறிடங்களுக்குக் கொண்டுபோய் விடும். - பாப்லியோ[3]
- உன்னைத் தாழ்த்திப் பேசும்போது, நீ அடக்கமாயிருத்தல் பெரிய காரியமன்று உன்னைப் புகழ்ந்துரைக்கும் பொழுது அடக்கமாயிருத்தல் அரிய பெரிய வெற்றியாகும். - அர்ச். பெர்னார்டு[3]
- கிறிஸ்தவன் முதிர்ந்து வரும் கதிரைப் போன்றவன் அவன் முதிர முதிரத் தன் தலையை அதிகமாகத் தாழ்த்திக் கொள்வான். - கத்ரீ[3]
- நீ இறைவனுடைய அருளையும். மனிதனுடைய அன்பையும். அமைதியையும் பெற வேண்டுமானால், உன் கண்முன்பே உன்னைத் தாழ்த்திக்கொள். உன் குற்றங்களுக்காக உன்னை மன்னித்துக்கொள்வதைக் குறைத்துப் பிறரை அதிகமாக மன்னித்து வரவேண்டும். - லெய்ட்டன் [3]
- உண்மையான பெரிய மனிதனுக்கு முதல் அடையாளம் பணிவு என்று நான் நம்புகிறேன். - ரஸ்கின்
- அடக்கம். இருளைப்போல் தெய்விக ஒளிகளைக் காண்பிக்கின்றது. - தோரோ[3]
- சமயத்தில் முதல் விஷயம் என்ன என்று நீங்கள் என்னிடம் கேட்டால், முதலாவது, இரண்டாவது. மூன்றாவது ஆகிய எல்லா விஷயங்களுமே அடக்கம் ஒன்றுதான் என்று நான் கூறுவேன். - அகஸ்டின் [3]
- கஷ்டங்கள். நஷ்டங்கள் அடைந்த பின்பு மனிதர் அதிக அடக்கத்தையும் அறிவையும் பெறுகின்றனர். - ஃபிராங்க்லின் [3]
- ஆண்டவனுக்கு உகந்தவர்கள் ஏழைகளைப்போன்ற அடக்கமுள்ள செல்வர்களும், செல்வர்களைப் போன்ற பெருந் தன்மையுள்ள ஏழைகளுமே ஆவர். - ஸா அதி[3]
- அடக்கமில்லாமல் நற்பண்புகளைச் சேகரிப்பதில் பயனில்லை அடக்கமுடையவர்களின் இதயங்களில் தங்கியிருப்பதிலேயே ஆண்டவனுக்கு மகிழ்ச்சி. - எரர்ஸ்மஸ்[3]
- அடக்கமும் அன்பும் உண்மையான சமயத்தின் சாரம். அடக்கமுள்ளவர் போற்றுகின்றனர். அன்புள்ளவர் நித்தியமான அன்புடன் கலந்துகொள்கின்றனர். -லவே[3]
- நாம் இல்லாமல் உண்மையில் இந்த உலகம் இயங்க முடியும் ஆனால், நாம் அப்படிக் கருதவேண்டும். - லாங்ஃபெல்லே[3]
- சைத்தான் ஒருவரை அண்டாமலிருப்பதற்கு அடக்கத்தைப் போல வேறு எதுவுமில்லை. - ஜோனாதன் எட்வர்ட்ஸ்[3]
- அடக்கமுடையவர்களுக்கு ஒரு பொழுதும் கோபம் வராது என்பதில்லை. அப்படியானால் அவர்கள் உணர்ச்சியற்றவர்கள் என்றாகிவிடும். ஆனால், அவர்கள் கோபம் வரும்பொழுது அதை அடக்கிக்கொள்வார்கள். எப்பொழுது கோபிப்பது உசிதமோ அப்பொழுதுதான் கோபிப்பார்கள். பழிக்குப் பழி வாங்குதல், எரிச்சல், புலனுணர்ச்சிகளில் திளைத்தல் ஆகியவை அடக்கத்தோடு சேர்ந்தவை அல்ல. தற்பாது காப்பும், அமைதியாகவும் நிதானமாகவும் உரிமையைப் பாதுகாப்பதும் அடக்கத்தில் அடங்கும். - தியோபிலாக்ட்[3]
- அடக்கம் அமரருள் உய்க்கும். க. திருவள்ளுவர் எல்லார்க்கும் நன்றாம் பணிதல். திருவள்ளுவர்[3]
- காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினுஉங் கில்லை உயிர்க்கு. திருவள்ளுவர்[3]
- கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. திருவள்ளுவர்[3]
- தன்னைத்தன் நெஞ்சம் கரியாகத் தான்அடங்கின் பின்னைத்தான் எய்தா நலன்இல்லை. அறநெறிச்சாரம்[3]
- அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல். வெற்றிவேற்கை[3]
- முழுவதுஉம் கற்றனம் என்று களியற்க, -நீதிநெறி விளக்கம்[3]
- சிற்றுணர்வோர் என்றும் சிலுசிலுப்பர் ஆன்றமைந்த முற்றுணர்வோர் ஒன்றும் மொழியாரே. - நீதி வெண்பா[3]
- அடக்கமாக வாழ்பவன், இம்மையிலும், மறுமையிலும் இன்பம் பெறுகிறான்.
- தன்னடக்கமே வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய தலையாய நெறியாகும்.
பழமொழிகள்
[தொகு]தமிழ்ப் பழமொழிகள்
[தொகு]- அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அடக்கம். நூல் 111- 112. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 71-80. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 3.13 3.14 3.15 3.16 3.17 3.18 3.19 3.20 3.21 3.22 3.23 3.24 3.25 3.26 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் -12-16. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.