உள்ளடக்கத்துக்குச் செல்

வழிபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
சார்லஸ் ஸ்பிராகா பியர்ஸின் மதம் (1896)

வழிபாடு என்பது ஒரு தெய்வத்தை நோக்கிய, சமய பக்தி செயலாகும்.  வழிபாட்டு முறையானது, முறைசாரா அல்லது முறையான குழு அல்லது ஒரு நியமிக்கப்பட்ட தலைவரால் எனத் தனித்தனியாக செய்யப்படலாம்.

மேற்கோள்கள்

[தொகு]
  • கடவுளை நோக்கி நிற்கும் ஆசையே பிரார்த்தனையின் தெளிவான லட்சியம் ஆகும். -பிலிப்ஸ் புரூக்ஸ்[1]
  • கடவுளிடம், இது 'வேண்டும்' என்று குறிப்பிடாமல் பொதுவாகப் பிரார்த்திப்பதே முறை. நமக்கு நன்மை எது என்பதைக் கடவுள் நன்கு அறிவார். -சாக்கிரட்டீசு[1]
  • மனிதனுடைய இதயம் ஊமையாய் இருந்தாலன்றி கடவுள் ஒருநாளும் செவிடாய் இருப்பதில்லை. -குவார்ல்ஸ்[1]
  • கடவுளிடம் மக்கள் பிரார்த்திப்பது எல்லாம் இரண்டும் இரண்டும் நான்கு ஆகாமலிருக்க வேண்டும் என்பதே. -ருஷ்யப் பழமொழி[1]
  • நாம் கடவுளிடம் எதை வேண்டுகிறோமோ அதையே கடவுள் நம்மிடம் வேண்டுகிறார். -ஜெரிமி டெய்லர்[1]
  • நமக்குத் தேவையான எல்லாம் கடவுளிடம் வேண்டலாம். ஆனால், வேண்டுவதற்கெல்லாம் நாம் கவனமாய் உழைத்தல் அவசியம். -ஜெரிமி டெலய்ர்[1]
  • 'கடவுளே! தைரியம் அருளும்' என்று பிரார்த்தித்தால், துன்பத் தீயில் தள்ளுவதே அவர் அருளும் வழி. -ஸெஸி[1]
  • என் பிரார்த்தனைகளுக்கு எல்லாம் கடவுள் அருளவில்லை என்பதற்காக அவருக்கு வந்தனம் அளிக்குமாறு வாழ்ந்துவிட்டேன்.-ஜீன் இன்ஜெலோ[1]
  • அறியாமலே எம் எண்ணங்களில் சில கடவுள் பிரார்த்தனையாக இருப்பதுண்டு. - விக்டர் ஹகோ[1]
  • ஒவ்வொரு புனிதமான ஆசையும் கடவுள் பிரார்த்தனையே ஆகும். -ஹூக்கர்[1]
  • சுவர்க்கம்தான் கேட்காமலே கிடைக்கும்; கடவுளோ கேட்டால்தான் கிட்டுவர். -லவல்[1]
  • கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டிய மூன்று வரங்கள்: முதலாவதாக நல்ல மனச்சான்று, இரண்டவாதாக மன ஆரோக்கியம், மூன்றாவதாகத் தேக ஆரோக்கியம். -ஸெனீகா[1]
  • பிரார்த்தித்தால் கேட்டதைப் பெறுவோம், அல்லது கேட்டிருக்க வேண்டியதைப் பெறுவோம். -லெய்ட்டன்[1]

குறிப்புகள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வழிபாடு. நூல் 34- 35. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=வழிபாடு&oldid=19095" இலிருந்து மீள்விக்கப்பட்டது