வாழ்க்கை

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

வாழ்க்கை (Life).

மேற்கோள்கள்[தொகு]

  • வாழ்க்கையைப் பற்றியே மக்கள் இன்றுவரை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. பிறகு எப்படி இவர்கள் மரணத்தைப் பற்றிப் புரிந்து கொள்வார்கள்? -கான்பூசியசு[2]
  • வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் கலந்துவரும் என்று வரட்டு வேதாந்தம் பேசிக் கொண்டே காலம் தள்ளக் கூடாது. விரக்தியாக வாழ்பவன், வாழவே தகுதியற்றவனாவான். எதிலும் சுவைஞன் உள்ளம் பெற வேண்டும். அந்த மனம் அமைந்தால் தான் வாழ்க்கையின் தெளிவு, மெலிவு, நெளிவு, வளைவுகளை நன்குணர்ந்து அவற்றை அதனதன் சுவைகளுக்கு ஏற்றாற்போல மகிழ்ச்சியுடன் வாழ்வதே சிறப்பான வாழ்க்கை. வாழ்க்கை கானல் நீர், அர்த்தமற்றது, இன்பமில்லாதது என்று வேதாந்தம் பேசுபவன், இந்த உலகில் வாழவே தகுதியற்றவனாவான். -ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்[3]
  • வாழ்க்கையில் ஒரு வெறி ஏற்பட்டால்தான் பிடிப்புடன் முன்னேறி வாழமுடியும் அதைச் சமயம் கொடுக்கிறது. அது சொல்லுகிற மோஷத்தைக் கொடுக்காவிட்டாலும் இது போதும். அந்த மோஷத்தை விட மேலானது. -புதுமைப்பித்தன்[4]

பழமொழிகள்[தொகு]

  • உலகம் எப்படி இருக்கிறதோ அப்படியே கொள்ளுங்கள்; எப்படி இருக்க வேண்டும் என்று பாராதீர்கள். - செர்மானிய பழமொழி [5]

குறிப்புகள்[தொகு]

  1. என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 21- 23. 
  2. என். வி. கலைமணி (2000). கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள். நூல் 7-25. சாந்தி நிலையம். Retrieved on 7 ஏப்ரல் 2020.
  3. என். வி. கலைமணி (1999). ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள். நூல் 9-41. பாரதி நிலையம். Retrieved on 7 ஏப்ரல் 2020.
  4. முல்லை பிஎல். முத்தையா (1998). புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள். நூல் 28-63. முல்லை பதிப்பகம். Retrieved on 22 ஏப்ரல் 2020.
  5. http://www.ponmozhigal.com/2017/01/blog-post_91.html

வெளியிணைப்புக்கள்[தொகு]

Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


Wiktionary
விக்சனரியில் இருக்கும் வாழ்க்கை என்ற சொல்லையும் பார்க்க.
"https://ta.wikiquote.org/w/index.php?title=வாழ்க்கை&oldid=19880" இருந்து மீள்விக்கப்பட்டது