காதல்
Appearance
காதல் என்பது உயிரினங்களுக்கிடையே ஏற்படும் பாலியல் ஈர்ப்பு, அன்பு, அக்கறை கலந்த ஒர் உணர்வு, சேர்ந்து வாழவேண்டும் என்ற ஒரு ஆசை ஆகும்.
காதல் பொன்மொழிகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- காதல், நெஞ்சில் ஒரு பொறியாகத்தான் இருக்கிறது; ஆனால் நாவிலோ அது பெரும் காவியமாய் இருக்கிறது. - லாங்க்பெல்லொ
- காதலே! உலகத்தில் உள்ள இன்பங்களும் உனக்கு ஈடாகாது என்பதை ஒப்புக் கொள்கிறேன். நீயும் நீ தரும் துன்பங்களுக்கு எல்லையே இல்லை என்பதை ஒப்புக் கொள். -சார்லவால்
- உங்கள் இதயத்தில் என்னை முத்திரையாகப் பதியுங்கள். உங்கள் கையில் என்னை முத்திரையாகக் குத்துங்கள். அன்பு, மரணத்தைப் போல் வலிமையானது. இணைபிரியாத நேசம், கல்லறையைப் போல் விடாப்பிடியானது. அன்பின் ஜுவாலை கொழுந்துவிட்டு எரிகிற தீ ஜுவாலை, அது “யா”வின் ஜுவாலை. பாய்ந்து வரும் வெள்ளம்கூட அன்பின் ஜுவாலையை அணைக்க முடியாது. ஓடிவரும் நதிகள்கூட அன்பை அடித்துச் செல்ல முடியாது. ஒருவன் அன்பை விலைக்கு வாங்க தன் செல்வத்தைக் கொட்டிக் கொடுத்தாலும், அந்தச் செல்வம் அடியோடு ஒதுக்கித்தள்ளப்படும். -விவிலியம் உன்னதப்பாட்டு 8:6, 7
- வாழ்க்கை என்பது ஒரு மலர்; காதல் என்பது அதிலே ஊறும் தேன். -விக்டர் ஹியூகோ
- உண்மையைச் சொன்னால் காதலுக்கும் நியாயத்திற்கும் இப்பொழுதெல்லாம் உறவு அதிகமில்லை. -சேக்சுபியர்
- இந்த உலகத்தில் நான் யாரோ ஒருவன் என நினைக்காதே யாரோ ஒருத்திக்கு நீயே உலகமாக இருக்க முடியும். -பில் வில்சன்
- அன்பு பொறுமையும் கருணையும் உள்ளது. அன்பு பொறாமைப்படாது, பெருமையடிக்காது, தலைக்கனம் அடையாது, கேவலமாக நடந்துகொள்ளாது, சுயநலமாக நடந்துகொள்ளாது, எரிச்சல் அடையாது, தீங்கை கணக்கு வைக்காது, அநீதியைக் குறித்து சந்தோஷப்படாமல் உண்மையைக் குறித்து சந்தோஷப்படும். எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும், எல்லாவற்றையும் நம்பும், எல்லாவற்றையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும், எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும். அன்பு ஒருபோதும் ஒழியாது. -விவிலியம் 1 கொரிந்தியர் 13:4-8
- காதல், இருமல், புகை இவற்றை மூடி மறைப்பது கஷ்டம். - பெஞ்சமின் பிராங்க்ளின்
- காதல், சாளரம் வழியாகப் புகுந்து, கதவு வழியாக வெளியே செல்லும். -வில்லியம் கேம்டன்
- இன்பத்தில் இனியதும் துன்பத்தில் கொடியதும் காதல். -பெய்லி.
- மனிதன் கண்டுபிடிப்புகளுள் மிகவும் மோசமானவை இரண்டு. ஒன்று காதல்; இன்னொன்று வெடி மருந்து. -ஏ.மொருவா
- காதல் பயிர் உயரியது, அது கண்களுக்குள் வளர்கிறது . -எப்.பிளெட்செர்
- காதல் மிக அபாயமான உள நோய். -பிளாட்டோ
- பலத்தை பலவீனம் அடக்கி ஆளும் வினோதம் தான் காதல். -கபிலர்
- காதலைப் பொருத்தவரை பெண்கள்தான் நிபுணர்கள், ஆண்களெல்லாம் கற்றுக்குட்டிகள்.[1] ஃப்ரான்ஸ்வா த்ருஃபோ
- காதல், மக்களின் இதயங்களிலே சிறகடித்துப் பறக்கும் போது, அதைக் கட்டி வைக்கவோ அதன் இறக்கைகளைப் பிணைத்துப் பிடித்து வைக்கவோ முயலுபவர்களைத் தான் அது பெரும் சித்திரவதைக்கு உள்ளாக்குகிறது. -நிக்கோலோ மாக்கியவெல்லி[2]
- சிறு குழந்தையைப் போலவும், அடிக்கொரு நினைப்புமாகவும் உள்ள அந்தக் காதல், அவர்கள் கண்களையும், இருதயங்களையும் அவர்களுடைய முதுகெலும்பையுங்கூடப் பிடுங்கியெடுத்து விடுகிறது. -நிக்கோலோ மாக்கியவெல்லி[2]
- காதலை விரும்பி, அதன் போக்குப்படி யெல்லாம் போகவிட்டு விடுபவர்களும் இருக்கிறார்கள். அது தங்களை விட்டு பறந்து போகும் போது அவர்கள் அதைப்போக விட்டுவிடுகிறார்கள். அது திரும்பி வரும்போது அதை மறுபடியும் ஆனந்தத்துடன் வரவேற்றுக் கொள்கிறார்கள். -நிக்கோலோ மாக்கியவெல்லி[2]
- காம உணர்ச்சிக்குக் கண்ணில்லாமல் இருக்கலாம்; காதலுக்குக் கண்ணில்லை என்பது பொய்யும். அவதூறானதுமாகும். - டேவிஸ்[3]
- மனிதனின் வாழ்க்கையில் காதல் ஒரு பகுதிதான். ஆனால், ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அதுவே முழுமையுமாகும். - பைரன்[3]
- காதல், கண்களால் காண்பதில்லை, மனத்தால் பார்க்கின்றது. - ஷேக்ஸ்பியர்[3]
பழமொழிகள்
[தொகு]- காதலும் காபியும் சூடாயிருந்தால் தான் ருசி. - செர்மானியப் பழமொழி
- காதலுக்கு கண் உண்டு ஆனால் பார்ப்பதுதான் இல்லை. -செர்மானியப் பழமொழி
- அந்தக் காலம் முதல் மாறாமல் இருப்பது நீரின் ஓட்டமும் காதலின் போக்கும் தான். - சப்பான் பழமொழி
- காதலால் வீரனானோர் பலர்; மூடரானோர் அவர்களை விட அதிகம். - சுவீடன் பழமொழி
- தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவையில்லை; காதல் வந்துவிட்டால் அழகு தேவையில்லை. - ஆப்கானிசுதான் பழமொழி
- காதல் வந்துவிட்டால் கழுதைகளும் நடனமாடும். -பிரான்சு பழமொழி
- அழகிகள் எல்லாரும் காதலிக்கப்படுவதில்லை; காதலிக்கப்படுகிற ஒவ்வொருத்தியும் அழகிதான். -ஆங்கிலப் பழமொழி
குறிப்புகள்
[தொகு]- ↑ தி இந்து, பெண் இன்று இணைப்பு, 2016 அக்டோபர், 23
- ↑ 2.0 2.1 2.2 நாரா. நாச்சியப்பன் (1993). சிந்தனையாளன் மாக்கியவெல்லி. நூல் 149-162. பிரேமா பிரசுரம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ 3.0 3.1 3.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 159-160. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.