வாழ்க்கை
Appearance
வாழ்க்கை அல்லது வாழ்வது (Living) என்பது பிறப்புக்ககும் இறப்புக்கும் இடையிலான காலம் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- வாழ்வு என்ற ஆடையில் எப்பொழுதும் இரண்டு வகை நூல்கள் இருந்தே தீரும். அவை நன்மை, தீமையே! -வில்லியம் ஷேக்ஸ்பியர்[1]
- வாழ்க்கையைப் பற்றியே மக்கள் இன்றுவரை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. பிறகு எப்படி இவர்கள் மரணத்தைப் பற்றிப் புரிந்து கொள்வார்கள்? -கான்பூசியசு[2]
- வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் கலந்துவரும் என்று வரட்டு வேதாந்தம் பேசிக் கொண்டே காலம் தள்ளக் கூடாது. விரக்தியாக வாழ்பவன், வாழவே தகுதியற்றவனாவான். எதிலும் சுவைஞன் உள்ளம் பெற வேண்டும். அந்த மனம் அமைந்தால் தான் வாழ்க்கையின் தெளிவு, மெலிவு, நெளிவு, வளைவுகளை நன்குணர்ந்து அவற்றை அதனதன் சுவைகளுக்கு ஏற்றாற்போல மகிழ்ச்சியுடன் வாழ்வதே சிறப்பான வாழ்க்கை. வாழ்க்கை கானல் நீர், அர்த்தமற்றது, இன்பமில்லாதது என்று வேதாந்தம் பேசுபவன், இந்த உலகில் வாழவே தகுதியற்றவனாவான். -ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்[3]
- வாழ்க்கையில் ஒரு வெறி ஏற்பட்டால்தான் பிடிப்புடன் முன்னேறி வாழமுடியும் அதைச் சமயம் கொடுக்கிறது. அது சொல்லுகிற மோஷத்தைக் கொடுக்காவிட்டாலும் இது போதும். அந்த மோஷத்தை விட மேலானது. -புதுமைப்பித்தன்[4]
- வாழ்க்கை வேதனையுமில்லை. இன்பமுமில்லை என்பதை நினைவில வைத்துக்கொள் இது கவனமாக நடக்க வேண்டிய தொழில் அதில் தைரியத்துடனும், தன்னலத்தியாக புத்தியுடனும் இயங்க வேண்டும். - டி. டாக்குவில்லி[5]
- வெறுமே வாழ்வது அவசியமில்லை. அதற்கப்பாலும் முன்னேறி நம் பெயரைத் துலங்கச் செய்ய வேண்டும். இது அவசியம். - ஜி. டி. அனன்ஸியோ[5]
- ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையும் ஒரு தேவதைக் கதை அதை எழுதிய விரல்கள் ஆண்டவனுடையவை. - ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்ஸன்[5]
- கொஞ்சம் வேலை, கொஞ்சம் உறக்கம், கொஞ்சம் காதல் எல்லாம் முடிந்துவிடுகின்றன. - மேரி ராபர்ட்ஸ் ரைன்ஹார்ட்[5]
- ஓர் இலையின் மேலுள்ள பனித்துளிபோல உனது வாழ்க்கை காலத்தின் விளிம்புகளில் நடனமாடிக்கொண்டிருக்கட்டும். - இரவீந்திரநாத் தாகூர்[5]
- தனக்குப்பின்னால் பெருமையையும், புகழையும் நிறுத்திவிட்டுச் செல்பவன் இறந்தவனில்லை. ஆனால், உயிரோடிருக்கும் பொழுது பழி சுமந்திருப்பவனே இறந்தவனாவான். - டியெக்[5]
- வாழ்க்கையின் இறுதியில் மறுபடி வாழ்க்கை யாத்திரையைத் தொடங்குவதற்கு யார்தான் விரும்புவர்? - திருமதி மெயின்டெனன்[5]
- நம் வேலை முடிகிறவரை நாம் நித்தியமானவர்களே. - ஒயிட்ஃபீல்ட்[5]
- நாம் நம் செயல்களில் வாழ்கிறோம். ஆண்டுகளில் அன்று: சிந்தனைகளில் வாழ்கிறோம். மூச்சிடுவதில் அன்று: உணர்ச்சிகளில் வாழ்கிறோம். கடிகாரம் காட்டும் மணிகளில் அன்று. நேரத்தை நாம் இதயத் துடிப்புகளைக்கொண்டு கணக்கிட வேண்டும். எவன் மிக அதிகமாகச் சிந்தனை செய்கிறானோ, தலைசிறந்த செயல்களைச் செய்கிறானோ அவனே அதிகமாக வாழ்பவனாவான். - பெய்லி[5]
- வாழ்க்கையைக் காதலிக்கவும் வேண்டாம். வெறுக்கவும் வேண்டாம்; அது எவ்வளவு காலம் நீண்டிருக்க வேண்டும் அல்லது குறைந்திருக்க வேண்டும் என்பதை இறைவனுக்கு விட்டுவிடுங்கள். - மில்டன்
- வாழ்க்கையின் உண்மையான குறிக்கோள் அழிவில்லாத வாழ்க்கையை அறிந்துகொள்வதாகும். - பென்[5]
- வாழ்க்கையின் இலட்சியம் இறைவனைப் போன்றிருந்தால், இறைவனைப் பின்பற்றும் ஆன்மா அவனைப் போலவே இருக்கும். - சாக்ரடிஸ்[5]
பழமொழிகள்
[தொகு]- உலகம் எப்படி இருக்கிறதோ அப்படியே கொள்ளுங்கள்; எப்படி இருக்க வேண்டும் என்று பாராதீர்கள். - செர்மானிய பழமொழி [6]
குறிப்புகள்
[தொகு]- ↑ என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 21- 23.
- ↑ என். வி. கலைமணி (2000). கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள். நூல் 7-25. சாந்தி நிலையம். Retrieved on 7 ஏப்ரல் 2020.
- ↑ என். வி. கலைமணி (1999). ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள். நூல் 9-41. பாரதி நிலையம். Retrieved on 7 ஏப்ரல் 2020.
- ↑ முல்லை பிஎல். முத்தையா (1998). புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள். நூல் 28-63. முல்லை பதிப்பகம். Retrieved on 22 ஏப்ரல் 2020.
- ↑ 5.00 5.01 5.02 5.03 5.04 5.05 5.06 5.07 5.08 5.09 5.10 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 312. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ http://www.ponmozhigal.com/2017/01/blog-post_91.html
வெளியிணைப்புக்கள்
[தொகு]