தீண்டாமை

விக்கிமேற்கோள் இலிருந்து

தீண்டாமை[1] ஒரு சமூகக் குழுவினரை ஏனைய சமூகக் குழுவினரோடு சம உரிமையோடு தொடர்புகளைப் பேணுவதைத் தடுக்கும் ஒரு சமூக முறைமையாகும். சமூகத்தின் பொது விதிகளுக்குள் வரையறுக்க முடியாதவர்கள் வழமையாக தீண்டாமைக்குட்படுத்தப்படுகின்றனர். இந்தியாவில் பொதுவாக பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர்கள்[2] இதற்கு ஆளாகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  • தீண்டாமை என்பதே சாதி காரணமாக ஏற்பட்டதே தவிர, அதற்கு வேறு காரணமே ஆதாரமே இல்லை. சாதியை வைத்துக்கொண்டு தீண்டாமை ஒழிய வேண்டும் என்பது சிறிதும் அறிவுடைமையாகாது. ஈ. வெ. இராமசாமி
  • சாதி பேதம் ஒழிவதாலும், மேல் சாதி-கீழ் சாதி ஒழிவதாலும், ஒழிய வேண்டும் என்று கேட்பதாலும் ஒரு தேசியம் கெட்டுப் போகுமானால், சுயராச்சியம் வருவது தடைப்பட்டு போகுமானால் அப்படிப்பட்ட தேசியமும் சுயராச்சியமும் ஒழிந்து நாசமாய்ப் போவது மேல். ஈ. வெ. இராமசாமி[3]
  • தீண்டாமை என்பது நமது சமூகத்தில் ஒரு மாசு. தீண்டாமை ஒரு விஷப் பாம்பு. அதைக் கொன்றாக வேண்டும். இராசகோபாலாச்சாரி[5]
  • தோழர்களே! ”தீண்டாமை விலக்கு” என்று வெறும் கூச்சலிட வேண்டாம். ஒவ்வொரு சேரியிலும் நுழையுங்கள்; மூடபக்தியால் வரும் கேட்டைத் தெரிவியுங்கள். சேரியிலுள்ள அழுக்கு, மலம், சேறு, பள்ளம், மேடு முதலிய அசுத்தங்களைப் போக்குங்கள். சேரிக் குழந்தைகளைக் கழுவிச் சுத்தமாக்குங்கள், தெருக்களைப் பெருக்குங்கள். ”குடியரசு” ”தமிழன்” ”சண்டமாருதம்” முதலிய பத்திரிகைகளைக் கிராமத்தில் வகிக்கச் சொல்லுங்கள். மந்திர தந்திரங்கள், பூஜை, நைவேத்தியங்கள் இவைகள் பாமர மக்களை மயக்கி ஆளச் செய்துவரும் உபாயங்கள், நீங்கள் அவர்கள் கண்களைத் திறகச் செய்யுங்கள். ஒலி பெருக்கிகளையும், இன்பக் காட்சிகளையும் சேரியில் அனுதினமும் கேட்கவும் செய்யுங்கள். இதைவிட மேலான வேலைகள் உலகில் உள்ளனவா?

சான்றுகள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. http://en.wikipedia.org/wiki/Untouchability
  2. http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1306/14/1130614049_1.htm
  3. குடி அரசு 18.07.1937
  4. 4.0 4.1 புலவர் ஆயை. மு. காசாமைதீன் (1984). திருவிக. சென்னை: தமிழ்நாட்டு அரசு பாடநூல் கழகம். pp. 112- 118. 
  5. கிருட்டிணகிரி மாவட்டம், தொரப்பள்ளி கிராமத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் பார்வையாளர்களுக்கு வழங்கும் இராசாசி வாழ்கை குறிப்பு ஏட்டில் உள்ள அவரது பொன் மொழிகள். வெளியீடு இயக்குநர், செய்தி- மக்கள் தொடர்பு துறை, சுற்றுலாதுறை தமிழ்நாடு அரசு.(நவம்பர் 1986 இல் அச்சிடப்பட்டது)
  6. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 111-120. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=தீண்டாமை&oldid=19116" இலிருந்து மீள்விக்கப்பட்டது