உள்ளடக்கத்துக்குச் செல்

நேர்மையின்மை

விக்கிமேற்கோள் இலிருந்து

வஞ்சகம் என்னும் நேர்மையற்ற, நாணயமற்ற செயல்குறித்த மேற்கோள்கள்

  • மனிதர் பிறப்பது மெய்யராக, ஆனால் இறப்பதோ வஞ்சகராகவே. -வாவனால்கூஸ்[1]
  • அற உடை அணிந்த மறத்தைப்போல அபாயகரமான்து கிடையாது. -பப்ளியஸ் ஸைரஸ்[1]
  • நயனம் ஒன்று சொல்ல நாவொன்று சொல்லின், விஷயம் அறிந்தவன் நயன மொழிகளையே நம்புவான். -எமர்ஸன்[1]
  • சூதிற்கும் அறிவிற்குமுள்ள வேறுபாடு குரங்கிற்கும் மனிதனுக்குமுள்ள வேறுபாடு போலாகும். - பென்[1]
  • வஞ்சக நடை என்பது மறம் அறத்திற்குச் செய்யும் மரியாதையே யாகும். -ரோஷிவக்கல்டு[1]
  • நம்மிட முள்ளதாக நாம் பாசாங்கு செய்யும் குணங்களைப் போல், நம்மிடம் உண்மையாகவேயுள்ள குணங்கள் ஒரு பொழுதும் நம்மை நகைப்பிற் கிடமாக்குவதில்லை. -ரோஷிவக்கல்டு[1]
  • உலகில் யாரும் அறியாதபடி உலவும் தீமை வஞ்சக நடை ஒன்றே. அதை ஆண்டவன் மட்டுமே அறிவான். -மில்ட்டன்[1]
  • வேஷம் போட்டு வெகு காலத்துக்கு ஏமாற்ற முடியாது. உண்மை இல்லாத இடத்தில் இயற்கை தலை காட்ட முயன்று கொண்டிருக்கும். என்றேனும் ஒருநாள் வெளிப்படுத்தியே விடும். -பிஷப் ஹால்[1]
  • எல்லோரிலும் யாரை எளிதாக ஏமாற்ற முடியும்? தன்னைத்தான். -புல்வெல் லிட்டன்[1]
  • உயர்ந்தோர் தோஷங்களாலேயே உருப்பெற்றவர் என்பர். -ஷேக்ஸ்பியர்[1]
  • ஏமாற்றிப் பழக ஆரம்பிக்கும்பொழுது எவ்வளவு தூரம் நம்பக்கூடிய பொய்களைச் சொல்லத் தெரியாமல் திண்டாடுகிறோம்! -ஸ்காட்[1]
  • தீயொழுக்கம் நல்லொழுக்கத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு நாம் அறியாமலே நம்மிடம் குடி புகுந்துவிடும். -ஸெனீக்கா[1]
  • என்ன அழகான பழம்-இதனுள்ளே அழுகல்-பொய் எவ்வளவு அழகாய் வேஷம் போட்டுக் கொள்கிறது -ஷேக்ஸ்பியர்[1]
  • வஞ்சக நடையுள்ளவன் இயற்கையான அயோக்கியத் தனம், செயற்கையான ஏமாற்றுக்குணம் ஆகிய இரண்டு சரக்குகளைக் கொண்டு செய்து தங்க நிறம் கொடுத்த மாத்திரை யாவான். -ஓவர்பரி[1]
  • வேண்டுமென்றே தன். நண்பனை ஏமாற்றும் ஒருவன், தன்னைப் படைத்த கடவுளையே ஏமாற்றுவான். - லாவேட்டர்[2]
  • நிரந்தரமான நன்மையைக் கைவிட்டுத் தாற்காலிக நன்மைகளை நாடுவது அயோக்கியதை. -போவி[2]
  • தீயவர் நம்மை நேருக்கு நேராக நின்று பார்க்கக் கூகவர் என்றெல்லாம் அறிவில்லாமல் பேசப்படுகின்றது. அந்தக் கருத்தை நம்ப வேண்டாம். ஆதாயம் ஏதேனும் கிடைக்குமானால், வாரத்தில் எந்த நாளிலும் அயோக்கியதை நம்மை ஏறிட்டுப் பார்த்து. நேர்மையைக்கூட விரட்டிவிடும். - டிக்கன்ஸ்[2]
  • ஒவ்வொரு மனிதனும் தன் அண்டையில் இருப்பவர்கள் தன்னை ஏமாற்றாமலிருக்க வேண்டும் என்று கவனமாய், பார்த்துக்கொள்கிறான். ஆனால், பின்னால் ஒரு காலம் வருகின்றது. அப்பொழுது அவன் தான் எவரையும் ஏமாற்றாமலிருக்க வேண்டுமே என்று கவனமாயிருக்கத்தொடங்குகிறான். அது முதல் எல்லாம் சரியாக நடந்து வருகின்றது. - எமர்ஸன்[2]
  • தீய வழியில் வந்தது எதுவும் தேய்ந்து போகின்றது. ஏனெனில் அதிலேயே அழிவுக்குரிய சாபத்தீடு அமைந்திருக்கின்றது. தீய வழிகளில் வந்த பொருள்களைத் தீய வழிகளிலே விரயம் செய்யவே ஆசையுண்டாகும். - எம். ஹென்ரி[2]
  • அயோக்கியதை யாரையும் விடாது நண்பரையும் ஏமாற்றும், பகைவரையும் ஏமாற்றும் முடிந்தால், கடவுளையும் ஏமாற்றும். - பாங்கிராஃப்ட்[2]
  • நியாயமான விலை கொடாமல் பொருள்களை அடித்துப் பேசிக் குறைந்த விலைக்கு வாங்குதல். கடைக்குள் புகுந்து பொருள்களைத் திருடுவது போன்றதே. - பீச்சேர்[2]
  • தீயவை தீய பயத்தலால் தீயவை
    தீயினும் அஞ்சப் படும். -திருவள்ளுவர்[2]
  • மறந்தும் பிறன்கேடு சூழற்க. - திருவள்ளுவர்[2]
  • வினைப்பகை வீயாது பின்சென்று அடும். - திருவள்ளுவர்[2]
  • தீயசெயல் செய்வார் ஆக்கம் பெருகினும்,
    தீயன தீயனவே வேறல்ல. - நீதிநெறி விளக்கம்[2]
  • அறம் புரிந்து அல்லவை நீக்கல் இனிது. - இனியவை நாற்பது[2]
  • அடல்வேண்டும் ஆக்கம் சிதைக்கும் வினை. - நான்மணிக்கடிகை[2]
  • அல்லவை செய்வார்க்(கு) அறம் கூற்றம். -நான்மணிக்கடிகை[2]

இதையும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வஞ்சகம். நூல் 74- 75. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 40-41. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=நேர்மையின்மை&oldid=19313" இலிருந்து மீள்விக்கப்பட்டது