உரையாடல்

விக்கிமேற்கோள் இலிருந்து

உரையாடல் (conversation) என்பது ஒருவர் மற்றவருடன் கலந்து பேசிக் (உரை) கொள்வதைக் குறிக்கும். உரையாடலின் போது ஒருவருக்கொருவர் அளவளாவி, பேசி, கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். எழுத்து வழியாக செய்திப் பரிமாற்றம் நடந்தால், அதுவும் உரையாடல் என்றே வழங்கும். உரையாடல் என்பது குமுகாயத்தில் ஒரு இன்றியமையாத திறனாகக் கருதப் படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  • மனித வாழ்வில் கிடைக்கக்கூடிய மகத்தான இன்பங்களில் நல்ல சம்பாஷணையும் ஒன்று. இன்பகரமாய்க் கழிந்த மாலைநேரத்தை வர்ணிக்கப் புகுந்த ஜாண்ஸன் இன்று நன்கு சம்பாஷித்தோம்” என்று கூறி முடித்தார். -ஆவ்பரி[1]
  • பிறரைப் பேசவிடாமல் பேசிக்கொண்டிருப்பவர் தம் குரல் தொனியைக் கேட்க விரும்புபவர், தம் குரல் தொனி இப்படியிருக்கும் என்று அறியாதவர் என இருவகையர். -செஸ்டர்ட்டன்[1]
  • சுமுகமாயிருத்தல் என்பது விலையின்றிக் கிடைக்கும். ஆனால் அதைக்கொண்டு அனைத்தையும் வாங்க முடியும். - பிராங்க்ளின்[1]
  • அறிவைவிட அந்தரங்க விசுவாசமே சம்பாஷணையை அதிகச் சோபிதமாக்கும். -ரோஷிவக்கல்டு[1]
  • யாரேனும் தவறாகப் பேசினால் கண்டிக்க வசதியுண்டேல் உடனே கண்டித்துவிடு. கண்டிக்க வசதியின்றேல் பார்வையாலும் மெளனத்தாலும் அதிருப்தியைத் தெரிவித்துவிடு. - எபிக்டெட்டஸ்[1]
  • பிறர் மனம் புண்ணாகாமல் பேசுவது அவசியமாவது போலவே பிறர் பேச இடங்கொடுத்து மரியாதையாகச் செவிசாய்ப்பதும் அவசியமாகும்.- ஹெச்.ஏ.[1]
  • சாமர்த்தியத்தை விடத் தன்னம்பிக்கையே சம்பாஷணையில் ஜெயம் தரும். -ரோஷிவக்கல்டு[1]
  • எவர் பேசுவதையும் கேட்டுக்கொள்; ஆனால் சிலரிடமே பேச்சுக்கொடு. எவர் கஷ்டத்தையும் தெரிந்து கொள்; ஆனால் உன் கருத்தைக் கூறிவிடாதே.-ஷேக்ஸ்பியர்[1]
  • உரையாடல் என்ற கலையில் ஒரு மனிதனுக்கு உலகிலுள்ள எல்லா மனிதர்களும் போட்டியாயிருக்கின்றனர். - எமர்சன்[2]
  • சம்பாஷணைதான் மாணவனுக்கு ஆராய்ச்சிக்கூடமும், தொழில் நிலையமும் ஆகும். - எமர்சன்[2]
  • உளரயாடலில் சாதுரியமான பேச்சைவிட நகைச்சுவையே அதிகம் தேவை. அறிவைவிடத் தெளிவு தேவை. புதிதாகத் தெரிந்துகொள்ளவோ. தங்களுக்கு அது தேவை என்று கருதவோ சிலரே விரும்புவர். எல்லாரும் விரும்புவது மகிழ்ச்சி, மூளைக்குச் சிரமம் கொடாமலிருத்தல் ஆகியவைகளே - ஸர் வில்லியம் டெம்பிள்[2]
  • உரையாடலில் முதல் தேவை. உண்மை; அடுத்தது. நல்ல பொருள்: மூன்றாவது, நகைச்சுவை நான்காவது, சாதுரியம். -ஸர் வில்லியம் டெம்பிள்[2]
  • மற்றவர்களுடைய மூளைகளிலே நம் மூளைகளைத் தேய்ந்துத் துலக்கிக்கொள்வது நல்லது. - மாண்டெயின்[2]
  • எப்படிக் கேட்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள். மோசமாய்ப் பேசுபவர்களிடமிருந்தும் நீ நன்மையடைய முடியும் - புளூடார்க்[2]
  • உவப்பான முறையில் பேசுவது போலவே, அடக்கத்துடன் செவிமடுத்துக் கேட்பதும்-உரையாடலில் முக்கியமானது. - ஆட்வெல்[2]
  • உரையாடலில் மெளனமாயிருப்பதும் ஒரு கலையாகும். - ஹாஸ்லிட்[2]
  • ஒருவர் பேசிக்கொண்டிருக்கும் பொழுது குறுக்கிட்டுப் பேகதலைவிட முரட்டுத்தனம் வேறில்லை. -லாக்[2]
  • மக்கள் எவ்வளவு குறைவாகச் சிந்தனை செய்கின்றனரோ அவ்வளவு அதிகமாகப் பேசுகின்றனர்.[2]
  • விவாதிக்கத்தக்க ஒவ்வொரு விஷயத்தையும் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தால். அதற்கு ஒரு முடிவே இராது - வில்லியம் பென்[2]
  • சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
    சொல்லிற் பயனிலாச் சொல். -திருவள்ளுவர்[2]

குறிப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/உரையாடல். நூல் 87- 88. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 126-127. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=உரையாடல்&oldid=20463" இலிருந்து மீள்விக்கப்பட்டது