அதிகாரத்துவம்
Jump to navigation
Jump to search
ஒரு அமைப்பில் செயல்பாட்டு நிர்வகிப்புக்கென இருக்கும் அமைப்புரீதியான கட்டமைப்பு, நடைமுறைகள், நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இவற்றின் சேர்க்கை அதிகாரத்துவம் என அழைக்கப்படுகிறது. மரபுவழியாக அதிகாரத்துவம் கொள்கையை உருவாக்குவதில்லை, மாறாக அதனை செயல்படுத்துகிறது. சட்டம், கொள்கை, மற்றும் கட்டுப்பாடுகள் பொதுவாக ஒரு தலைமையில் இருந்து உருவாகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- அதிகாரத்தை வைத்திருப்பவர்களைக் கட்டாயப்படுத்தாவிட்டால் அவர்கள் ஒருபோதும் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். - ஜவகர்லால் நேரு[1]
- சட்டம், ஒழுங்கு என்பது பிற்போக்குவாதியின், கொடுங்கோல் அரசனின், அதிகாரத்தை வைத்துக்கொண்டு அதை விட்டுக்கோடுக்க மறுப்பனின் கடைசி புகலிடம்; சுதந்திரம் கிடைக்கும்வரை சட்டமும் ஒழுங்கும் இருக்க முடியாது. ஜவகர்லால் நேரு
- (1928 திசம்பர் 12ஆம் நாள் பூனாவில் நடைபெற்ற பம்பாய் மாகாண இளைஞர் மாநாட்டுத் தலைமை உரையிலிருந்து.)[1]
- மனிதன், ஆணவமுள்ள மனிதன்! சொற்ப அதிகாரத்தை அணிந்துகொண்டு. அவன் இறைவனின் முன்னிலையில், கற்பனைக்கு அடங்காத தந்திரங்களை யெல்லாம் செய்கிறான். அதைக் கண்டு தேவர்களும் கண்ணீர் வடிக்கின்றனர். - வில்லியம் ஷேக்ஸ்பியர்[2]
- அதிகாரத்தில் நிலையாக அமர்ந்துள்ள ஒருவன். முன்னேற்றத்தைவிட அதை நிலைநிறுத்திக்கொள்வதே தலைசிறந்த இராஜதந்திரம் என்று தெரிந்துகொள்கிறான். - லோவெல்[2]
- அதிகாரத்தை அடிக்கடி பயன்படுத்துவதும், ஆராயாமல் உபயோகிப்பதும் அதிகாரத்திற்கே குழி தோண்டுவதாகும். இடைவிடாமல் இடி இடித்து வந்தால், ஏதோ ஓர் ஆலையின் ஓசையைப்போல், அதிலே பயம் தெளிந்துவிடும்.[2]
- அரசன் ஓர் அதிகாரத்தைப் படைத்தால், அதை விலை கொடுத்து வாங்க இறைவன் உடனே ஒரு மூடனைப் படைக்கிறான். -கோல்டெர்ட்[2]
- சுதந்தரமான நம் ஜனங்களோ இந்த அரசாங்கமோ எப்பொழுதாவது ஒழுக்கத்தில் நிலைகுலைந்தால். அதற்குக் காரணம், பதவிக்காக இடைவிடாமல் நடக்கும் போட்டியும் போராட்டமுமேயாகும். பதவி என்பது வேலை செய்யாமலே வாழ்க்கையை நடத்துவதாகும். - ஆபிரகாம் லிங்கன்[2]
- உயர்ந்த உத்தியோகம் ஒரு கோபுரம் போன்றது. இரண்டு வகையான ஜந்துக்களே அதன் உச்சியை அடைய முடியும். அவை பாம்புகளும் கழுகுகளுமேயாம். - டி. அலெம்பர்ட்[2]
- புனிதமற்ற மனிதர்கள் அதிகாரம் செலுத்தும்பொழுது கெளரவமான பதவி தனி உடைமையாகிவிடுகின்றது. - வில்லியம் ஷேக்ஸ்பியர்[2]
- அதிகாரம் வெகு சுலபமாகத் தனக்கொரு பெயரைச் சூட்டிக் கொள்ள் முடியும். ஆனால் வெறும் பெயர் தனக்கோர் அதிகார சக்தியை அடைய முடியாது. -நிக்கோலோ மாக்கியவெல்லி[3]
- அதிகாரத்தை அடைபவர்கள் அதை மேன் மேலும் அதிகரித்துக் கொள்ளவே ஆசைப்படுகிறார்கள். அதனால் அவர்கள் ஆபத்தானவர்கள். -நிக்கோலோ மாக்கியவெல்லி[3]
அதிகாரத்துவம் குறித்த பழமொழிகள்[தொகு]
- முறைமைக்கு மூப்பு இளமையில். - பழமொழி
- உடைப்பெரும் செல்வத்து உயர்ந்த பெருமை
அடக்கமில் உள்ளத்த னாகி - நடக்கையின்
ஒள்ளியன் அல்லான்மேல் வைத்தல் குரங்கின்கைக்
கொள்ளி கொடுத்து விடல். - பழமொழி[2]
குறிப்புகள்[தொகு]
- ↑ 1.0 1.1 அர்ஜுன் தேவ், தமிழில் நா. தர்மராஜன், (2010). ஜவகர்லால் நேரு போராட்டகாலச் சிந்தனைகள். புதுதில்லி: நேஷனல் புக்டிரஸ்ட், இந்தியா,. pp. 83-91. ISBN ISBN 978-81-237-3332-6.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் -19-22. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ 3.0 3.1 நாரா. நாச்சியப்பன் (1993). சிந்தனையாளன் மாக்கியவெல்லி. நூல் 149-162. பிரேமா பிரசுரம். Retrieved on 14 ஏப்ரல் 2020.